திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்! – Tamil VBC

திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்!

வரலட்சுமியைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் விஷால்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் உல்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழை விட தெலுங்கில் இப்படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வெற்றி சந்திப்பு ஆந்திராவில் நடைபெற்றது. இதில் விஷால் கலந்து கொண்டார். அப்போது ‘டெம்பர்’ தமிழ் ரீமேக்கான ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருவது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்தார் விஷால்.

அப்போது, ‘வரலட்சுமியுடன் தான் திருமணமா? எப்போது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர். சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன்” என்று விஷால் பதிலளித்தார்.

விஷாலும், வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் நீண்டகாலமாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் உலவுகின்றன. இருவரிடமும் பலமுறை இதுகுறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *