ஊரடங்கால் உறவினர்கள் இல்லாமல் தனியாக இருந்த நோயாளி – மருத்துவர் செய்த நெகிழவைக்கும் செயல்! – Tamil VBC

ஊரடங்கால் உறவினர்கள் இல்லாமல் தனியாக இருந்த நோயாளி – மருத்துவர் செய்த நெகிழவைக்கும் செயல்!

சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் ஊட்டிவிட்டது சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

உலகெங்கும் இதுவரை 11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அந்த நோயாளிக்கு தேவையான உதவிகளை செய்ய ஆள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் நெப்ராலஜி துறையின் இயக்குனர் மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம் நோயாளிகளைப் பார்க்க வந்தபோது அவரது நிலையைப் பற்றி அறிந்துள்ளார். இதையடுத்து யாருமில்லாத அந்த நோயாளிக்கு உணவினை ஊட்டிவிட்டு ஆதரவாகப் பேசியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *