ஒரே நாளில் 750 பேர் பலி: கடவுளால் கூட காப்பாற்ற முடியாத நிலையில் இத்தாலி! – Tamil VBC

ஒரே நாளில் 750 பேர் பலி: கடவுளால் கூட காப்பாற்ற முடியாத நிலையில் இத்தாலி!

கொரோனா வைரஸ் ஆரம்பித்த சீனா கூட தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. சீனாவில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இத்தாலியில் பொதுமக்களின் அஜாக்கிரதை காரணமாக நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பலியாகி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.


நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 750 பேர் மரணம் அடைந்து உள்ளது ஒரு மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது. இத்தாலியில் மட்டும் இதுவரை 6800 பேருக்கு மேல் கொரோனா வைரசால் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் நிலைமை கைமீறி போய்விட்டதால் கடவுளால் கூட அந்நாட்டு மக்களை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் கொரோனா வைரசால் இத்தாலியில் மட்டும் 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதே மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 140 கோடி ஜனத்தொகை கொண்ட சீனாவிலேயே 80 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிறிய நாடான இத்தாலியில் 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை, இத்தாலி ஓவர்டேக் செய்துவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.தற்போதைய நிலவரப்படி சீனாவில் 80 ஆயிரம் பேர்களும் இத்தாலியில் எழுபதாயிரம் பேர்களும் அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர்களும் ஸ்பெயின் நாட்டில் 40 ஆயிரம் பேர்களும் ஜெர்மனியில் 30 ஆயிரம் பேர்களும் கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை நேற்று இரவு நிலவரப்படி 536 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *