தீபாவளிக்கு ரிலீஸாகிறது சர்கார்! ரசிகர்கள் கொண்டாட்டம்! – Tamil VBC

தீபாவளிக்கு ரிலீஸாகிறது சர்கார்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருந்த தடை நீங்கியுள்ளது. சர்கார் படத்தின் கதை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குனர் சர்கார் படத்திற்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ராஜேந்திரன் வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து படம் வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது.

நடிகர் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. ‘சர்கார்’ படம் குறித்த செய்திகளில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பும் கூடவே பரபரப்பான தகவல்களும் சுற்றிவருகிறது. போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டரால் சர்ச்சையானது.

இதனையடுத்து பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் நாசுக்காக பேசிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் அரசியலுக்கு வந்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதலமைச்சராக நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தன்னுடைய செங்கோல் படத்தின் கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துவைத்திருந்ததாகவும், அந்தக் கதையை திருடி முருகதாஸ் சர்கார் என படம் இயக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தீபாவளி பட்டாசு வழக்கு.. தென்மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த சிறப்பு சலுகை என்ன தெரியுமா? இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுந்தர் முன்பு இன்று வந்தது. தீபாவளிக்கு படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்படுமோ என்பதால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உயர்நீதிமன்றம் வந்திருந்தனர். இதனிடையே ராஜேந்திரன் தன்னுடைய வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து சர்கார் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது.

ராஜேந்திரனிடம் சர்கார் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கதை வருண் ராஜேந்திரனுடையது தான் என்பதை ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புகொண்டுள்ளார். வருண் ராஜேந்திரன் கேட்டது போல திரைப்படத்தில் அவருடைய பெயரை போட்டு நன்றி என போடவும், நஷ்ட ஈடு தொகையாக கேட்ட ரூ. 30 லட்சத்தில் கணிசமதான தொகையை தர ஒப்புகொண்டதையடுத்து வழக்கை ராஜேந்திரன் வாபஸ் பெற்றுள்ளார்.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *