சோழியை வீட்டில் வைப்பதால் மகாலட்சுமியின் அருளை பெறமுடியுமா…? – Tamil VBC

சோழியை வீட்டில் வைப்பதால் மகாலட்சுமியின் அருளை பெறமுடியுமா…?

சோழிகள் பெரும்பாலும் பிரசன்னம் பார்ப்பதற்காகவும் விளையாடுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. சோழியை சுழற்றி போட்டு, நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ன நடக்காது என்பதை, சோழி பிரசன்னத்தால் சிலர் மிகச்சரியாக கூறிவிடுவார்கள். இது அந்த காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்தது, நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.சோழியில் மொத்தமாக 130 வகை சோழிகள் இருப்பதாக நூல்களில் கூறப்பட்டுள்ளது. எல்லா வகை சோழியையும் நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். தவறு ஒன்றும் இல்லை. எந்த வகை சோழி நம் வீட்டில் இருந்தாலும் அது நம் வீட்டிற்கு நல்ல பலனைத் தரும் என்பதை பார்ப்போம்.


எப்படிப்பட்ட வாஸ்து தோஷமாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியானது இந்த சோழிக்கு உள்ளது. பொதுவாகவே கடலிலிருந்து எடுக்கப்படும் எந்த பொருட்களாக இருந்தாலும் அதை மகாலட்சுமிக்கு இணையாக கூறுவார்கள்.உங்களது வீட்டில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்க இந்த சோழியை வைத்து ஒரு பரிகாரத்தை செய்யலாம். இப்படி செய்யும்பட்சத்தில் மகாலட்சுமி மனநிறைவோடு வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
ஒரு கண்ணாடி அல்லது பீங்கானால் செய்யப்பட்ட பவுல் வாங்கிக்கொள்ள வேண்டும். சிறிய அளவில் இருந்தாலும் போதும். அதில் பாதி அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளவும். 5 சாதாரணமான வெள்ளை சோழிகள், 1 கருப்பு சோழி இவைகளை எடுத்துக் கொண்டு, 3 வெள்ளை சோழிகளை நிமிர்த்தியவாறு தண்ணீருக்குள் போட வேண்டும். மீதமுள்ள 1 கறுப்பு சோழி, 2 வெள்ளை சோழிகளை கவிழ்த்து தண்ணீருக்குள் போட்டு விட வேண்டும். அதாவது 3 சோழிகள் கவிழ்ந்து இருக்கவேண்டும். 3 சோழிகள் நிமிர்ந்து இருக்க வேண்டும். இது ஒரு வாஸ்து குறிப்பு.இப்படி செய்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும் என்பது உறுதி. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். இதற்காக பயன்படுத்தப்படும் பவுல் கண்டிப்பாக எவர்சில்வரிலோ அல்லது இரும்பிலோ இருக்கக் கூடாது. எல்லா வகையான சோழிகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *