இதயத்தின் ஆரோக்கியத்தை காக்க உதவும் நிலக்கடலை…!! – Tamil VBC

இதயத்தின் ஆரோக்கியத்தை காக்க உதவும் நிலக்கடலை…!!

தினமும் 5 முதல் 10 நிலக்கடலை சாப்பிட்டால் இவற்றின் பலன் இரட்டிப்பாகி விடும். மற்ற உணவு பொருட்களை போன்றே நிலக்கடலையிலும் பல சத்துக்கள் உள்ளன.தினமும் கடலையை சிறிதளவு எடுத்துக்கொள்வோர் நீண்ட காலம் நோய்களின்றி வாழ்வதாக கண்டறிந்தனர்.தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்கக்கூடிய மாற்றங்கள் ஏராளம். இதய நோய், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களில் இருந்து அது நம்மை காத்துக் கொள்ளுமாம். சீனர்கள் தங்களது உணவில் தினமும் கடலையை சேர்த்துக் கொள்கிறார்கள்.


கடலையால் தயாரிக்கப்பட்ட ஏதேனும் உணவு பொருட்களை தினமும் எடுத்துக் கொள்வதால், சுவாச நோய்கள், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பாதிப்புகள் போன்றவை வரவிடாமல் கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் தடுக்கிறது.கடலை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதற்காக கடலையை அள்ளி அள்ளி சாப்பிடக்கூடாது. 10 கிராம் அளவு கடலையை சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பலன் கிடைக்காதாம்.கடலை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறதாம். குறிப்பாக ரத்த நாளங்களில் ஏற்பட கூடிய நோய்களை இவை தடுக்கிறது. மேலும், மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களிலிருந்தும் இவை காக்கிறதாம். பொதுவாகவே ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடலமைப்பும் சற்றே வேறுபட்டிற்கும்.தினமும் கடலை சாப்பிடுவதால் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் சம அளவில் இதன் பயன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல ஆராய்ச்சியில் கூறுவது படி, கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே ஏற்படுகிறது. 10 கிராம் அளவிற்கு அதிகமாக இதனை எடுத்து கொள்வது உகந்தது அல்ல. எனவே, நீங்களும் கடலை சாப்பிட்டு ஆரோக்கியத்தை பேணலாம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *