தர்ஷன் சனம் ஷெட்டி விவகாரம் குறித்து முதன் முறையாக பேசிய பிக்பாஸ் க்ஷெரின்! – Tamil VBC

தர்ஷன் சனம் ஷெட்டி விவகாரம் குறித்து முதன் முறையாக பேசிய பிக்பாஸ் க்ஷெரின்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். சனம் ஷெட்டியும் தர்ஷன் குறித்து நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனம் ஷெட்டி தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தகு பதிலளித்த தர்ஷன், காதல் என்ற பெயரில் என்னை அவள் இருக்க சொல்லி சொல்லி டார்ச்சர் செய்தாள், எங்கேயும் தனியாக செல்ல கூடாது…மற்ற பெண் போட்டியாளர்களுடன் பேசக்கூடாது என என்னிடம் கூறிவிட்டு அவள் அவளுடைய எக்ஸ் பாய்பிரண்டுடன் நைட் பார்ட்டியில் தங்கியிருந்தால் என தர்ஷன் கூறினார். மேலும் ஷனம் ஷெட்டி – தர்ஷன் இருவரும் பிரிய ஷெரின் தான் காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், இது குறித்து வாய்திறக்காமல் மௌனம் காத்துவந்த ஷெரின் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, யாரோ செய்த தவறுக்காக என்னை பழி சொல்வது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது என்பதால் நான் அமைதியாக இருக்கிறேன்.அதற்காக பலவீனமானவள் என நினைக்கவேண்டாம். இந்த விவகாரம் எனக்கு தொடர்பில்லாததால் பேசாமல் இருக்கிறேன். இரண்டு பேர் சம்மந்தப்பட்ட காதல் முறிவு விவாகரத்தை பெரிய விஷயமாக பார்ப்பதைவிட பல முக்கிய பிரச்னைகள் இந்த உலகத்தில் உள்ளது. எனவே இனிமேல் இதைப்பற்றிய கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் நான் பதில் சொல்லமாட்டேன்” என்று ஷெரின் மிகுந்த கோபத்துடன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/B9oHbS1FIEI/?utm_source=ig_web_copy_link

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *