உடல் எடையை 2 வாரத்திலேயே குறைக்க, ஒரு துண்டு இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க…! – Tamil VBC

உடல் எடையை 2 வாரத்திலேயே குறைக்க, ஒரு துண்டு இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க…!

இப்போதெல்லாம் எடையை குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். உணவின் மேல் உள்ள காதலால் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டு விட்டு, முன்பு இருந்ததை விட இருமடங்கு உடல் எடை கூடியவர்கள் இங்கு அதிகம். உடல் எடையை குறைக்க தெரியாமல் தவறான வழி முறைகளையெல்லாம் பலர் பின்பற்றுகின்றனர். இனி இது போன்ற பிரச்சினையில் இருந்து உங்களை காக்கிறது வெறும் ஒரு துண்டு இஞ்சி வைத்தியம். ஒரு துண்டு இஞ்சியை கொண்டு 2 வாரத்திலேயே உங்களின் உடல் எடையை குறைத்து விடலாம் நண்பர்களே. எப்படினு இந்த பதிவை படித்து தெரிஞ்சிக்கோங்க.

அபரிமித வளர்ச்சியா..? நாளுக்கு நாள் உடல் எடை கூடி கொண்டே போகிறது என வருந்துபவர்கள் பலர். உடல் எடையை கூட செய்வது இந்த கொழுப்புகளும், கொலெஸ்ட்ரோலும் தான். இவை இரண்டும் உடலில் சரியான அளவில் இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சினை ஏற்படாது. நீங்கள் அபரிமிதமாக எடை கூடுகின்றீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற தீர்வு இஞ்சி தான்

மூலிகை அரசன் இஞ்சி..! நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல மூலிகைகளில் முதல் இடத்தில் இருப்பது இஞ்சி தான். இஞ்சியை வைத்து எல்லா வித நோய்களின் மருத்துவத்திற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இதில் பல வகையான சத்துக்களும், நோய் எதிப்பு தன்மையும், இருக்கிறதாம். அதனால் தான், இஞ்சியை மருந்துகளின் அரசனாக அவர்கள் கருதினர்.

கொலஸ்டராலை சட்டென கரைக்க… இஞ்சியை பயன்படுத்தியே நம்மால் எளிதில் கொலஸ்ட்ராலை குறைத்து விட முடியும். அத்துடன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் இஞ்சி கரைத்து விடும். இதனால் உடல் பருமன் பிரச்சினை குணமாகும். மேலும், தொப்பையை எளிதாக இஞ்சியை வைத்து குறைத்து விடலாம்.

நாள் முழுக்க இதை குடியுங்க..! எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இந்த குறிப்பு எளிதில் உதவும். தேவையானவை :- வெள்ளரிக்காய் 1 இஞ்சி 1 துண்டு எலுமிச்சை பாதி புதினா சிறிது

செய்முறை :- வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். பிறகு இதனை 1 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு, மறுநாள் இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் உடல் எடை குறைய கூடும்.

புதுவித மூலிகை டீ விரைவிலே உடல் எடையை குறைக்க ஒரு அருமையான தீர்வு உள்ளது. அதுதான் இந்த இலவங்க-இஞ்சி மூலிகை டீ. தேவையானவை :- இலவங்க பொடி 1/4 ஸ்பூன் இஞ்சி சிறிய துண்டு நீர் 1 கப்

செய்முறை :- முதலில் இஞ்சியை நன்றாக நசுக்கி கொள்ளவும். அடுத்து, நீரை 5 நிமிடம் கொதிக்க விட்டு அதில் நசுக்கிய இஞ்சி மற்றும் இலவங்க பொடியை போடவும். 3 நிமிடம் கழித்து இதனை வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு தினமும் காலையில் குடித்து வந்தால் எளிதில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, எடையை குறைத்து விடலாம்.

புதினாவும் இஞ்சியும்… உங்கள் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, தொப்பையை எளிதில் குறைக்க கூடிய அதிசய வைத்தியம் இந்த குறிப்பில் உள்ளது. தேவையானவை :- இஞ்சி சிறிது 5 புதினா இலைகள் 1 கப் தண்ணீர்

செய்முறை :- புதினாவை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். அடுத்து, இஞ்சியையும் நன்கு நசுக்கி கொள்ள வேண்டும். 1 கப் நீரை கொதிக்க விட்டு, அதில் இஞ்சி மற்றும் புதினாவை சேர்க்கவும். 3 நிமிடம் கழித்து இதனை வடிகட்டி தினமும் காலை வேளையில் குடித்து வரலாம்.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் டீ இந்த வகை டீயில் ஒரு அருமையான தீர்வு கிடைக்கும். அதவாது, இதில் எலுமிச்சை கலப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இவற்றில் அதிகம் இருக்கும். எனவே, உடல் பருமனையும் குறைத்து, உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி விடுமாம். தேவையானவை :- எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் இஞ்சி சிறிய துண்டு தண்ணீர் 1 கப்

செய்முறை :- தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் நசுக்கிய இஞ்சியை போடவும். 2 நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி கொண்டு, எலுமிச்சை சாற்றை இதனுள் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் குடலில் சேர்த்துள்ள அழுக்குகளும் நீங்கும். அத்துடன் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்குந்தால், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *