உங்களால தான் உங்க ரசிகர்கள் மோசமா ஆயிட்டாங்க: அஜித் மீது கஸ்தூரி குற்றச்சாட்டு – Tamil VBC

உங்களால தான் உங்க ரசிகர்கள் மோசமா ஆயிட்டாங்க: அஜித் மீது கஸ்தூரி குற்றச்சாட்டு

அஜீத் மற்றும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர்களால் தான் அஜித் ரசிகர்கள் இந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்கின்றனர் என்று நடிகை கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சில மாதங்களாகவே நடிகை கஸ்தூரிக்கும் அஜீத் ரசிகர்களுக்கும் டுவிட்டரில் மோதல் இருந்து வந்தது தெரிந்ததே. கஸ்தூரி குறித்து ஆபாசமான கருத்துக்களை அஜித் ரசிகர்கள் பதிவு செய்து வருவதாக கூறப்பட்டது.


இந்த நிலையில் நேற்றும் அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை மிக மோசமாக விமர்சனம் செய்து டுவிட் செய்துள்ளனர். இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் அஜித் மற்றும் சுரேஷ் சந்திரா ஆகிய இருவரும் அஜித் ரசிகர்களை கண்டிக்காமல் மௌனத்துடன் இருப்பதால்தான் அஜித் ரசிகர்கள் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உடனடியாக அஜித் மற்றும் சுரேஷ் சந்திரா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் இத்தகையவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஸ்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் தன்னை பற்றி ஆபாசமாக பதிவு செய்த ட்வீட்டுக்களையும் அவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்தூரியின் வேண்டுகோளை ஏற்று அஜித் இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *