10 அடி நீள துண்டை மொத்தமாக விழுங்கிய மலைப்பாம்பு! கவனத்தை ஈர்க்கும் மருத்துவர்கள் வெளியிட்ட வீடியோ – Tamil VBC

10 அடி நீள துண்டை மொத்தமாக விழுங்கிய மலைப்பாம்பு! கவனத்தை ஈர்க்கும் மருத்துவர்கள் வெளியிட்ட வீடியோ

அவுஸ்திரேலியாவில் பசியால் கடற்கரையில் பயன்பட்டத்தும் துண்டை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிய நிலையில், மருத்துவர்கள் அந்த துண்டை போராடி வயிற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்று தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. குறித்த வீடியோ பதிவில் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றில் சிக்கிய பொருளை மருத்துவர்கள் போராடி வெளியே எடுக்கின்றனர்.அந்த பாம்பானது பசியால் பீச் டவலை விழுங்கியுள்ளது. 18 வயதுடைய அந்த பாம்பு விழுங்கிய 10 அடி நீளமுள்ள அந்த துண்டு, பாம்பின் நடு உடலில் சிக்கிக் கொண்டது.மருத்துவர்கள் நீண்ட கம்பி போன்ற ஒன்றினை பாம்பின் வயிற்றுக்குள் மெல்ல மெல்ல உள்ளே அனுப்புகிறார்கள்.

அதற்கு முன்பாக பாம்பின் வயிற்றில் எந்த இடத்தில் டவல் இருக்கிறது என்பது கணித்துக் கொள்கிறார்கள்.
அதன்படி, ஒரு மருத்துவர் பாம்பின் தலைப்பகுதியில் அழுத்திப்பிடித்துக் கொண்டு அந்த கம்பியை உள்ளே அனுப்புகிறார்.மற்றொருவர் பாம்பின் பின் பகுதியில் இருந்து அழுத்துகிறார். ஒரு வழியாக அந்த கம்பியின் மூலம் டவல் வெளியே எடுக்கப்படுகிறது.பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் சிட்னி மருத்துவமனை குறித்த வீடியோவை தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *