அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன்கள் கொண்ட மருதோன்றி…!! – Tamil VBC

அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன்கள் கொண்ட மருதோன்றி…!!

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும் உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று புண் சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.


மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.

மருதோன்றி இட்டுக்கொண்டால் மன அழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மருதோன்றி விதையிலுள்ள எண்ணெய்யை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *