பழங்கால பழக்கம் கண்மை வைப்பது அழகிற்கு மட்டும் அல்ல வீட்டிலேயே எப்படி செய்வதுனு தெரியுமா? – Tamil VBC

பழங்கால பழக்கம் கண்மை வைப்பது அழகிற்கு மட்டும் அல்ல வீட்டிலேயே எப்படி செய்வதுனு தெரியுமா?

கண்மை கண்களை அழகுப்படுத்த தான் என்று நாம் நினைத்துகொண்டிருக்கிறோம். ஆனால் நிச்சயம் ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது என்பது தான் உண்மை.தும்பை பூவை நிழலில் உலர்த்தி பொடித்து வையுங்கள். நன்றாக உலர்ந்ததும் உரலில் இடித்து கொள்ளுங்கள். சந்தனகட்டையை எடுத்து இலேசாக நீர் விட்டு அரைத்து அந்த கரைசலை ஒரு அகன்ற கிண்ணத்தில் ஊற்றி சிறிது நீர் விடுங்கள். இப்போது மஸ்லின் துணியை திரியாக கிழித்து அந்த கிண்ணத்தில் ஊறவிடுங்கள்.


5 மணி நேரம் வைத்து பிறகு திரியை எடுத்து நிழலில் உலர்த்தி விடுங்கள்.பொன்னாங்கண்ணி கீரையை சுத்தம் செய்து உலர்த்தி நீர் விடாமல் அரைத்து சாறு பிழிந்து கொள் ளுங்கள். அகல் விளக்கை உபயோகப்படுத்துவதற்கு முன் அதை நீரில் நன்றாக கழுவி காய விடுங்கள்.அகல் விளக்கில் முதலில் பொன்னாங்கண்ணி கீரை சாறு ஒரு டீஸ்பூன் விடுங்கள்.பொடித்த தும்பை பூ பொடியை அகலில் சேர்த்து கலந்து விடுங்கள். பிறகு அகல் மூழ்கும் வரை நல்லெண்ணெய் விட்டு நிழலில் உலர்த்திய திரியை போடுங்கள். இதே போன்று மூன்று அகல் விளக்கையும் தயார் செய்யுங்கள்.

அகலமான செம்பு அல்லது ஸ்டீல் தட்டை எடுத்து கொள்ளுங்கள். இதில் மீதியிருக்கும் பொன்னாங் கண்ணி கீரை சாறு குழைத்த சந்தனம் விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து தடவுங்கள்.பிறகு மூன்று அகல் விளக்கையும் முக்கோணம் போல் பக்கத்தில் வைத்து விளக்கேற்றுங்கள். அதன் மீது இந்த தட்டை முழுவதுமாக விளக்கு எரியாமல் இருக்கும்படி கவிழ்த்துவிடுங்கள். தட்டில் முழுமையாக கருப்பு படர்ந்திருக்கும்.மறுநாள் காலை அந்த தட்டை நிமிர்த்தி எடுத்து அந்த கருப்பு தூளை ஸ்பூனால் சுரண்டி எடுத்து சேர்த்துவிடுங்கள். இப்போது அதை குழைப்பதற்கு தேவையான அளவு விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக குழைத்து எடுத்தால் கண்மை தயார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *