நிச்சயதார்த்தம் முடிஞ்சி ஓடிப்போன காதலர்… சீரியல் நடிகையின் காதல் சோகக்கதை – Tamil VBC

நிச்சயதார்த்தம் முடிஞ்சி ஓடிப்போன காதலர்… சீரியல் நடிகையின் காதல் சோகக்கதை

ரோஜா சீரியல் மூலம் பெண்களிடம் பிரபலமான நடிகை பிரியங்காவின் காதல் கதை அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலம். இதில், ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த நபர் பிரியங்காவின் காதலர் எனவும் செய்திகள் கசிந்தது. இந்நிலையில், பிரியங்காவின்

ரோஜா சீரியல் மூலம் பெண்களிடம் பிரபலமான நடிகை பிரியங்காவின் காதல் கதை அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலம். இதில், ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த நபர் பிரியங்காவின் காதலர் எனவும் செய்திகள் கசிந்தது.

இந்நிலையில், பிரியங்காவின் காதல் கதை தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் பெயர் ராகுல். அவரும், பிரியங்காவும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோரின் சம்மதப்படி கடந்த 2018ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக திருமணம் தள்ளிக்கொண்டே போயுள்ளது.

அதை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலனளிக்கவில்லை. இதற்கிடையில் பிரியங்காவின் காதலர் ராகுல் மலேசியாவுக்கு சென்றுவிட்டாராம். அவரை தொடர்பு கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த பிரியங்கா இனிமேல் இது சரிவராது என்கிற முடிவிற்கு வந்துவிட்டார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *