அண்ணா காப்பாத்துங்கண்ணா.. என்னை காப்பாத்துங்கண்ணா.. கெஞ்சி கெஞ்சியே உயிரை விட்ட மாணவர்! – Tamil VBC

அண்ணா காப்பாத்துங்கண்ணா.. என்னை காப்பாத்துங்கண்ணா.. கெஞ்சி கெஞ்சியே உயிரை விட்ட மாணவர்!

“அண்ணா காப்பாத்துங்கண்ணா.. என்னை காப்பாத்துங்கண்ணா”.. என்று கெஞ்சி கெஞ்சியே உயிரை விட்டுள்ளார் காஞ்சி மாணவர் ஒருவர்! துறுதுறுவென விளையாடி கொண்டிருந்த மாணவனுக்கு நேர்ந்த இந்த துயரம் தமிழக மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

காஞ்சிபுரம், கீரை மண்டபம் பகுதியில் வசிப்பவர் நடராஜ்.. இவரது மகன் கணேஷ்குமார்… கல்லூரி மாணவர்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால், பச்சையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

சாயங்காலம் விளையாடி முடித்ததும், தண்ணீர் குடிக்க சென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே கணேஷ்குமார் அதே இடத்தில் சுருண்டு விழுந்துவிட்டார்.இதை பார்த்த ஒருவர் அவரது குடும்பத்துக்கு தகவல் சொல்ல, அவர்கள் பதறியடித்து கொண்டு பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால் கணேஷ்குமார் இறந்து அரை மணி நேரம் ஆகிவிட்டதாக டாக்டர்கள் சொல்லவும், கதறி துடித்து அழுதனர் பெற்றோர்! இதையடுத்து, மகனின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான், கடைசியாக 108க்கு போன் செய்திருப்பது தெரியவந்தது.

அதனால் செல்போனில் உள்ள கால் ரெக்கார்டை எடுத்து பார்த்தனர்… அதில் கணேஷ் குமார் பதற்றத்துடன் பேசுகிறார். “நான் பச்சையப்பன் ஸ்கூல் கிட்ட இருக்கிறேண்ணா… மூச்சு முட்டுது கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா” என்கிறார்… “சீக்கிரம்னா எங்கிருந்து வர்றது? நீங்க எங்க இருக்கீங்கன்னு தெளிவா சொல்லுங்க… பயப்படாதீங்க… பக்கத்துல யாராவது இருந்தா போனை அவங்க கிட்ட குடுங்க.. பக்கத்துல யாருமேவா இருக்கமாட்டாங்க” என்று பதில் வருகிறது.

“ஆமாண்ணா.. யாருமே இல்லை.. சீக்கிரமா வாங்கண்ணா.. என்னை காப்பாத்துங்கண்ணா” என்று கணேஷ்குமார் திணறி திணறியே தான் இருக்கும் அட்ரஸை சொல்ல… “நீங்கதான் பக்கத்தில் யாராவது இருக்காங்களான்னு பார்க்கணும்… போங்க.. டக்குன்னு நடந்துபோய் யாரையாவது எங்களுக்கு கால்பண்ண சொல்லு” என்று அலட்சிய பதிலுடன் முடிகிறது அந்த ஆடியோ.

கணேஷ்குமாருக்கு ஏற்கனவே சுவாச கோளாறு இருந்திருக்கிறது.. சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார்.. ஆனால் உடல்நலக் கோளாறு இருந்தும், எவ்வளவு நேரம் விளையாடினார் என நமக்கு உறுதியாக தெரியவில்லை… சுவாச கோளாறு பிரச்சனை வரபோகவேதான் 108-க்கு போன் செய்துள்ளதாக தெரிகிறது.. 16 நிமிடம் உயிருக்கு போராடி.. கெஞ்சி பேசியும் 108 அலட்சியம் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால் கணேஷ்குமார் அட்ரஸை தெளிவாக சொல்லவில்லை என்கிறார்கள் 108 தரப்பினர்.. தெளிவாக சொன்னால்தானே நாங்கள் வர முடியும்? எந்த இடம் என்று சரியாக தெரியாமல் நாங்கள் எப்படி கிளம்பி, எங்கேன்னு போறது? என்று கேட்கின்றனர்… ஆனால் ஒரு உயிர் கெஞ்சி கெஞ்சியே பறிபோனது, நம் அடிமனசை பிசைந்து கொண்டே இருக்கிறது!

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *