சன்னி லியோன் சதையை பிச்சி எடுக்குறாங்க.. தலைவியை என்னடா பண்றீங்க.. பாவம் விட்ருங்க.. கதறும் பேன்ஸ்! – Tamil VBC

சன்னி லியோன் சதையை பிச்சி எடுக்குறாங்க.. தலைவியை என்னடா பண்றீங்க.. பாவம் விட்ருங்க.. கதறும் பேன்ஸ்!

மிருகங்களின் தோல்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக சன்னி லியோன் பதிவிட்டுள்ள புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.பீட்டா இந்தியாவுக்கு ஆதரவாக, லெதர் பொருட்கள் மற்றும் ஆடைகளை பயன்படுத்த வேண்டாம் என நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கவர் போட்டோ வைரலாகி வருகிறது.பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியான சன்னி லியோன், பீட்டா இந்தியாவில் தொடர்ந்து உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பீட்டா இந்தியா மேகஸின் அட்டை படத்திற்காக நடிகை சன்னி லியோன் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை சன்னி லியோனின் முதுகில் உள்ள சதையை பிச்சி எடுப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. மேலும், லெதர் பொருட்களை பயன்படுத்தாமல் வீகன் பொருட்களை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகை சன்னி லியோன், மிருகங்களின் தோல்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என பீட்டா இந்தியா சார்பாக குரல் கொடுத்துள்ளார். அதற்காக பிரத்யேக போட்டோஷூட்டும் நடத்தி அதிபயங்கரமான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ஆமாம்.. ஆமாம்.. நீங்கள் சொல்வது உண்மை தான் என்பது போல கலாய்த்து வருகின்றனர்.

சன்னி லியோன் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், உயிரோடு இருக்கும் தோலையா எடுத்து இதுபோன்ற பொருட்களை தயாரிக்கிறாங்க? செத்த மிருகத்தின் தோலைத் தானே எடுத்து லெதர் பொருட்களை உபயோகப்படுத்துறாங்க என கேள்வி எழுப்பி உள்ளார். இவரத் கேள்விக்கு சன்னி லியோன் விடையளிப்பாரா என்று பார்ப்போம்.

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு பாலிவுட்டில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். நம்ம ஊர்க்கார பையன் ஒருத்தன், இந்த புகைப்படத்தை பார்த்து பதறியது போல, “தலைவியை என்னடா பண்றீங்க.. பாவம் விட்டுடுங்க என கத்தி ஸ்மைலி எல்லாம் போட்டு மிரட்டி உள்ளார்.

இதே புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் நடிகை சன்னி லியோன், தற்போது பதிவிட்டுள்ளார். காதலர் தினமான இன்று, மிருகங்களை காதலிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படியொரு ரத்தக்களறியான புகைப்படத்தை பதிவிட்டு, மிருகங்களை வேட்டையாடக் கூடாது எனக் கூறியுள்ள சன்னி லியோனின் இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

மற்றவர்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. லெதர் தொழிலை நம்பி பல மனிதர்கள் இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைப்பது போன்ற இது போன்ற கருத்துக்களை பொது மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என்கிற தொனியில் இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

காசுக்காக எப்படியும் நடிப்பவர் தானே நீங்கள், பீட்டா இந்தியா தரும் பணத்திற்காக, இப்படி முதுகின் சதையை பிய்த்துக் கொள்வது போன்ற போட்டோஷாப், போட்டோவை பதிவிட்டு பிரச்சாரம் செய்கிறீர்கள், எல்லாம் பைசா, பைசா பைசாவுக்குத்தான் என இந்த நெட்டிசன் பங்கமாக நடிகை சன்னி லியோனை கழுவி ஊற்றியுள்ளார்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *