அரைகுறை டிரெஸில் இளைஞருடன் பைக்கில் சுற்றும் நடிகை.. வைரலாகும் போட்டோ.. பச்சையாய் கேட்ட நெட்டிசன்ஸ்! – Tamil VBC

அரைகுறை டிரெஸில் இளைஞருடன் பைக்கில் சுற்றும் நடிகை.. வைரலாகும் போட்டோ.. பச்சையாய் கேட்ட நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை இளைஞருடன் அரைகுறை உடையில் பைக்கில் ஊர் சுற்றும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை மீரா மீதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் எப்படியாவது பிரபலமாகி விடலாம் பட வாய்ப்பு கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் பங்கேற்றார். அவர் நினைத்தது போலவே பெரும் பிரபலமானார். ஆனால் எல்லாமே நெகட்டிவ் பிரபலம்தான். ஆரம்பத்தில் சாக்ஷி மற்றும் அபிராமி ஆகியோர் மீரா மிதுனை பிக்பாஸ் வீட்டில் கார்னர் செய்தனர்.

இதனால் மக்களுக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது. ஆனாலும் மீரா மிதுன் சக ஹவுஸ் மேட்ஸ்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதையெல்லாம் கூட மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் சக போட்டியாளரான இயக்குநர் சேரனிடம் வம்பிழுத்த மீரா மிதுன், அவர் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பிரளயத்தை கிளப்பினார்.

இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இயக்குநர் சேரன் தன் மீதான இந்த குற்றச்சாட்டை கேட்டு கதறி அழுதார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் குறும்படம் போட்டு மீரா மிதுன் சொல்வது பொய் என நிரூபித்தார். அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டார் சேரன்.

தன்னுடைய பழிவாங்கும் எண்ணத்தால் சேரனின் பெயரை டேமேஜ் செய்ய முயன்று மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டார் மீரா மிதுன். அதனை தொடர்ந்து வெளியே வந்த பிறகும் அவர் தொடர்பான சர்ச்சை ஆடியோக்கள் வெளியாகி, மீரா மிதுனின் கொஞ்ச நஞ்ச பெயரும் டேமேஜ்ஜானது.

பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் எப்போதும் அரை குறை ஆடையில் போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் மீரா மிதுன். மேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனாலும் பல ஆண்களுடன் அவர் பப்புகளில் நெருக்கமாக டான்ஸ் ஆடும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் இளைஞர் ஒருவருடன் பைக்கில் ஊர் சுற்றும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. கறுப்பு நிற லோ நெக் ஸ்லீவ் லெஸ் டாப்பில் வயிறு தெரிய செம கிளாமராக உள்ளார் மீரா மிதுன். மேலும் அந்த இளைஞருடன் பைக்கில் அமர்ந்து கொண்டு ஒரு கையை அவரது தோளிலும் மற்றொரு கையை அவரது இடுப்பிலும் வைத்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோவை கவுல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மீரா மிதுன் காதலர் தினத்தை கொண்டாட எங்கு செல்கிறார்.. ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்டுள்ள அவர் கெஸ் பண்ணுங்கள் என தெரிவித்துள்ளார். அதனை அப்படியே தனது பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள மீரா மிதுன், முடிஞ்சா என்னை பிடியுங்கள் என கூறியிருக்கிறார்.

மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இன்னைக்கு எந்த பப்? என கேட்டுள்ளனர். மேலும் சிலர் இவன் யாரு இவன் கூட பைக்ல போறீயே என கேட்டுள்ளனர். மேலும் சிலர் முடிந்தால் அந்த லிங்கை அனுப்புங்கள் என இரட்டை அர்த்தத்ததில் பதிவிட்டுள்ளனர். பலர் நீ எங்கே போனா எங்களுக்கு என்ன என கோபமாக பதிவிட்டுள்ளனர்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *