இந்த ராசிக்காரர்கள் உங்கள் நண்பனாக கிடைத்தால் வாழ்க்கை முழுவதும் பேரதிர்ஷ்டமாம்! இதில் உங்க ராசியும் இருக்கா? – Tamil VBC

இந்த ராசிக்காரர்கள் உங்கள் நண்பனாக கிடைத்தால் வாழ்க்கை முழுவதும் பேரதிர்ஷ்டமாம்! இதில் உங்க ராசியும் இருக்கா?

ஜோதிடப்படி 12 ராசியில் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கை முழுவதும் சிறந்த நண்பராக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:மேஷ ராசிக்காரர்கள் நட்பில் அதிக கவனமும், ஆற்றலும் செலவழிப்பார்கள். அவர்கள் பிஸியாக இருப்பவர்கள், ஆனால் அவர்கள் எப்போதும் தங்கள் நண்பர்களுக்காக நேரத்தை செலவிடுகிறார்கள்.அவர்கள் ஒரு பெரிய சமூக வட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மிக நீண்ட காலமாக இருந்த ஒரு சில நண்பர்களும் எப்போதும் இருப்பார்கள்.
மேஷம் நெகிழ்வானவர்கள் மற்றும் சாகசங்களை மேற்கொள்பவர்கள், புதிய விஷயங்களை முயற்சிப்பது அல்லது போட்டிகளில் பங்கேற்பது என எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள்.தங்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இவர்கள் நினைப்பது நட்பைத்தான். கடினமான சூழ்நிலைகளில் எப்போதும் இவர்கள் நண்பர்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

ரிஷபம்:தங்கள் வாழ்க்கையில் யாருடைய நட்பை வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.
அளவற்ற அன்பை கொடுக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள், இவர்கள் நம்பகமானவர்களாகவும், பொறுமையானவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவர்கள் தயங்காமல் செய்வார்கள்.இந்த ராசிக்காரர்கள் சிறந்த நண்பர்கள் என்ற நற்பெயரைக் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை தீவிரமடையும் போது இவர்கள் நண்பர்களை கைவிடமாட்டார்கள், இதைத்தான் அவர்களின் நண்பர்களும் எதிர்பார்ப்பார்கள்.

மிதுனம்:மிதுன ராசிக்காரர்கள் வாழ்நாள் முழுவதும் நட்பை பராமரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஏனெனில் இவர்கள் நண்பர்களாக கிடைத்தவர்கள் ஒருபோதும் இவர்களை விட்டு விலகமாட்டார்கள்.அவர்கள் உங்கள் பிரச்சனைகளை கையாளுவதில் சிறந்தவர்கள், சிறந்த தீர்வுகளை வழங்குவார்கள். இவர்களுடன் இருக்கும்போது பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும். தங்கள் நண்பர்களின் முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள்.
அவர்கள் தங்கள் நட்பில் அரவணைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும், தங்கள் நண்பருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்பு தங்கள் நண்பருக்கு என்ன தேவை என்பதை பெரும்பாலும் அறிவார்கள்.

சிம்மம்:சிம்ம ராசிக்காரர்கள் அருமையான நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்குவார்கள், இவர்களுடன் நண்பர்களாக இருக்க அனைவரும் விரும்புவார்கள்.இவர்கள் எப்பொழுதும் நண்பர்கள் சூழ இருந்தாலும் இவர்களுக்கு ஒரு சிலர் மட்டுமே இவர்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருப்பார்கள். நெருங்கிய நண்பர்களுக்கு இவர்கள் எப்பொழுதும் தங்களின் முழு அன்பை வழங்குவார்கள்.இவர்களின் நட்பானது எல்லைகளை கடந்ததாக இருக்கும். இவர்கள் ஒருபோதும் நண்பர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், மனதளவில் காயப்படாதவரை இவர்கள் ஒருபோதும் நட்பை விட்டு வெளியேறமாட்டார்கள்.

துலாம்:துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்கள். இவர்கள் அனைவருக்குமே வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்க விரும்புவார்கள்.தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு நண்பர்கள் கிடைத்தாலும் இவர்கள் பழைய நண்பர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.எவ்வளவு நண்பர்கள் வந்தாலும் உடனழைத்து செல்லத்தான் விரும்புவார்களே தவிர யாரையும் விட்டுவிட மாட்டார்கள்.புதிய நண்பர்களை உருவாக்க விரும்பினாலும் பழைய நண்பர்களை பொக்கிஷமாக இவர்கள் பாதுகாப்பார்கள். இவர்கள் தங்கள் நண்பர்களின் வாழ்க்கையில் ஆச்சரியங்களை உருவாக்குவார்கள்.

மகரம்:மகர ராசிக்காரர்கள் தங்களின் நண்பர்களை தேர்வு செய்வதில் புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பார்கள்.
இவர்கள் பல நண்பர்களாக இருந்தாலும் சரி, வெகுசில நண்பர்களாக இருந்தாலும் சரி எல்லாரையும் தக்கவைத்துக் கொள்ள எப்போதும் முயற்சி செய்வார்கள். இவர்கள் நம்பகமானவர்களாகவும் எப்போதும் ஆதரவாளர்களாகவும் இருப்பார்கள்.
கொடுத்த வாக்கை காப்பாற்றவும், எப்போதும் உங்களுக்கு பின்னாடி ஆதரவாகவும், உங்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆதரவாகவும் அவர்கள் இருப்பார்கள்.இவர்கள் ஒருபோதும் நட்பில் இருந்து வெளியேறமாட்டார்கள், ஒருவேளை அவர்கள் வெளியேறினால் அதற்கு பின்னால் வலிமையான காரணம் இருக்கும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *