சனிப் பெயர்ச்சி பலன்கள் – 2020 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) – Tamil VBC

சனிப் பெயர்ச்சி பலன்கள் – 2020 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

சனிபகவான் உங்கள் ராசிக்கு ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப் போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வீர்கள். செய்தொழில் படிப்படியாக வளர்ச்சி அடையும். உங்கள் விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் அனைவரும் பாராட்டுவார்கள்.சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற நிலைக்கு உயர்வீர்கள். செய்தொழிலில் உங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வீர்கள். கடமைகளைச் சரிவரச் செய்து வெற்றிப்பாதையில் பயணிப்பீர்கள். காலம் அறிந்து நடப்பதால் சுலபமாக வெற்றியடைந்துவிடுவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்த புதிய வழிகளில் செயல்படுவீர்கள். புதிய யுக்திகள் மனதில் உதயமாகும். உங்கள் திறமைகள் தக்க நேரத்தில் வெளிப்படும். கடினமான தருணங்களில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். புதிய நிலம், வீடு, வண்டி வாங்கும் யோகமும் உண்டாகும். உழைப்பின் மூலம் முழுப்பலன்களையும் அனுபவிப்பீர்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் பணவருவாய் குறைந்தாலும் எதிர்கால திட்டங்களுக்காகப் பாடுபடுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களின் மூலம் வருமானத்தைப் பெருக்க முயற்சி எடுப்பீர்கள். துறையில் புதிய யுக்தி மூலம் சாதனை படைப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைபாக்கியம் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப நடைமுறைகளை மாற்றிக் கொள்வீர்கள். வேலைகளில் தனி முத்திரை பதிப்பீர்கள்.21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் பலன் தரும். திறமைக்குத் தகுந்த பரிசுகள், பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலைகளுக்குத் தகுந்தவாறு திறமைகளை கூட்டியும் குறைத்தும் வேலைகளை செய்து முடித்து விடுவீர்கள். குறை சொல்பவர்களின் வாயை அடைத்து விடுவீர்கள். உடன்பணியாற்றுபவர்களை அரவணைத்துச் சென்று அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் திறமைகளை முதலீடு செய்து புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. பூர்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கி சுமுகமான பாரப்பிரிவினை உண்டாகும். அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். அனாவசியப் பயணங்களையும் தவிர்த்துவிடுங்கள். மனக்குழப்பங்களைத் தவிர்க்க தனிமையை நாடுவீர்கள். உடன்பிறந்தோருக்காகவும் சிறிது செலவு செய்ய வேண்டி வரும். ஆன்மிக பலம் முன்பை விட அதிகமாகும். மகான்களையும் மகத்துவம் நிறைந்த புனிதத்தலங்களையும் வழிபடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த 2020 }ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி காலத்தில் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வேலைகள் திட்டமிட்டபடியே, குறித்த காலத்திற்குள் முடிவடையும். வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவுநிலை உண்டாகும். அலுவலகத்தில் கடன்பெற்று வீடு, வாகனம் வாங்குவீர்கள். வியாபாரிகள் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் வியாபாரத்திலேயே குறியாக இருக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சலில் நலன்களைப் பார்ப்பீர்கள். பூமி லாபம் உண்டாகும். புதிய குத்தகைகள் தேடி வரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வங்கிக் கடன்களும் கிடைக்கும். நீர்வள ஆதாரங்களை சீரமைத்துக் கொள்ளும் காலகட்டமாக இது அமையும் என்றால் மிகையாகாது.அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப்பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கவலைப்பட ஏதுமில்லை. சமுதாயத்தில் கௌரவம், புகழ் கூடும். கலைத்துறையினருக்கு புகழ், பாராட்டு கிடைக்க சற்று தாமதமாகும். வேலைகளில் பொறுப்புடன் இருப்பீர்கள். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். உற்றார் உறவினர்களிடம் நல்ல உறவை தக்க வைத்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து குதூகலமடைவீர்கள்.பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
சனிபகவான் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப் போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் பல துறைகளில் ஈடுபாடு உண்டாகும். செய்தொழிலில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பலவகையிலும் வருவாய் கிடைக்குமென்றாலும் சில அநாவசியச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. மனவிரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவீர்கள். அசையாச் சொத்துகளின் மூலமும் வருவாய் வரத் தொடங்கும். திருமணமாகாமல் இருந்தவர்களுக்குத் திடீரென்று திருமணம் நடந்தேறும். மனதில் புதிய தெம்புடன் பணியாற்றுவீர்கள். செய்தொழிலில் இருந்த பழைய பிரச்னைகளும் ஒன்றன்பின் ஒன்றாக மறைந்துவிடும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் இராது. பொதுகாரியங்களிலும் தானதர்மங்களிலும் ஈடுபடுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களும் ஆதரவாக இருப்பார்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் பெரிய திட்டங்கள் நிர்வகிக்கும் வாய்ப்பு உண்டாகும். திறமையையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வீர்கள். புதிய வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பழைய கடன்களையும் திருப்பி அடைத்து விடுவீர்கள். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மன வளமும் சிறப்பாக இருக்கும். வங்கிகளில் சேமிப்பு உயரத் தொடங்கும். ஆன்மிகத்திலும் தெய்வ வழிபாட்டிலும் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். பெற்றோருடனும் இணக்கமான நிலைமை தொடரும்.21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் எவ்வளவுக்கெவ்வளவு பாடுபடுகிறீர்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்புக்கு பின்வாங்கக்கூடாது. சமுதாய நலப்பணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பெயர், புகழ் உயரும். வேதாந்தத்திலும் தத்துவத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். பொருளாதாரத்திலும் அபிவிருத்தியைக் காண்பீர்கள்.14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் தனித்து நின்று செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். முகத்தில் பொலிவும் நடையில் கம்பீரமும் உண்டாகும். அறிவாற்றல் கூடும். சொல்வாக்கு செல்வாக்காக மாறும். மனதில் நற்சிந்தனை உருவாகும். வம்பு வழக்குகளும் சாதகமாக முடிவடையும். எதிரிகளும் தாங்களாகவே விலகிப்போவார்கள். மனநிம்மதியுடன் வாழும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். அலைச்சல் இல்லாமல் வேலைகளைச் சுலபமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் சகஜ நிலையை கடைபிடிப்பது அவசியம். வீண் பேச்சு வார்த்தைகளால் குழப்பங்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் வெளிப்படையாகப் பழக வேண்டாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலனடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கும் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். கால்நடைகளால் நல்ல பலன்களையும் காண்பீர்கள். சலிப்பில்லாமல் உழைத்தால் மேலும் முன்னேறலாம்.அரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத்தொடங்குவீர்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். நண்பர்கள்போல் பழகும் எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். உயர்ந்தவர்களைச் சந்தித்து வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும் பணமும் ஒருங்கே வந்து சேரும். சக கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் வரும்.
பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வீண் யோசனைகள் உங்கள் வலிமையை குறைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து சுமுக நிலையை உண்டாக்கவும். பெற்றோரின் ஆசியும் கணவரின் ஆதரவும் இந்த காலகட்டம் முழுவதும் கிடைக்கும். மாணவமணிகள் மற்றவர்களை அதிகம் எதிர்பார்க்காமல் கல்வி சம்பந்தப்பட்ட வேலைகளை நீங்களே செய்யுங்கள். பெற்றோர், ஆசிரியரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள்.பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
சனிபகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப் போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடலில் இருந்த நோய்நொடி உபாதைகள் தீர்ந்து வாலிபனைப்போல் வலம் வருவீர்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப்பெறுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட இனங்களிலிருந்து சலுகைகள் கிடைக்கும். உயர்ந்த எண்ணங்களும் நேர்மையான குணமும் ஏற்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும்.மழலை பாக்கியமும் கிடைக்கப் பெறும். இழந்த கைப்பொருளை மீட்டு விடுவீர்கள். முந்தைய காலத்தில் திருட்டுப்போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும். செய்யும் தொழிலில் நிரந்தரத் தன்மை, சுக சௌகர்யங்கள் உண்டாகும். பல நாள்களாக ஒதுக்கி வைத்திருந்த முயற்சிகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். விரோதிகளாகச் செயல்பட்டவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். வசிக்கும் வீட்டை மறுபடியும் கட்டி முடித்து விடுவீர்கள். மூடப்பட்டிருந்த தொழில் தலங்களை மீண்டும் திறந்து திறம்பட நடத்துவீர்கள்.

21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் புதிய நூதன முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சோதனைகள், மனக்குழப்பங்கள், துயரங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இல்லத்திற்கு ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். அதிகமாகக் கடன் வாங்க வேண்டாம். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். செய்தொழிலை மேம்படுத்த, வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்து, கௌரவம் உயரும். பொது காரியங்களிலும் ஈடுபட்டு நற்பெயரெடுப்பீர்கள்.21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இரட்டிப்பு லாபம் பெறுவார்கள். பங்குவர்த்தகத் துறையின் மூலமும் வருமானத்தை எதிர்பார்க்கலாம். நண்பர்களுடன் கூட்டு சேராமல் தனித்து இயங்குவீர்கள். குடும்பப் பாரம்பரிய தொழிலிலும் முன்னேற்றம் காண்பீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு நல்ல யோசனைகளையும் வழங்குவீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். மகிழ்ச்சியுடன் காரியங்களைச் செய்வீர்கள். வழக்கு விஷயங்களைச் சமரசமாகத் தீர்த்துக் கொள்வீர்கள். விரோதமாக இருந்த உடன்பிறந்தோரும் மனம் மாறுவர். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறையும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான நிலை உண்டாகும். ஆன்மிகத்தில் முழு நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குழந்தைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மனக்குழப்பங்கள் எதுவும் ஏற்படாது காக்கப்படும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகள் உதவியாக இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு கிடைக்கும். உழைப்பு வீண் போகாது. வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். எண்ணங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்வதற்கு சேமிப்புகள் கைகொடுக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். விவசாயிகள் அரசாங்க உதவிகளைப் பெறுவீர்கள். விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகள் செய்து லாபம் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட காரியங்கள் எளிதில் வெற்றியடையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய பொறுப்புகளை கவனத்துடன் எடுத்துக்கொள்ளவும். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் பலிக்கும். புதிய நண்பர்களால் பெருமை அடைவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது துறை சார்ந்த பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்டு எடுப்பீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகள் மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். தெய்வ பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். மாணவமணிகள் கேளிக்கைகளிலிருந்து மனதை அகற்றி படிப்பில் கவனமுடன் ஈடுபடவும். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகவும்.பரிகாரம்: திருவேங்கடநாதனை வழிபட்டு வரவும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
சனிபகவான் உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் 24.01.2020 முதல் 17.01.2023 வரை சஞ்சரிக்கப் போகிறார். 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் வாழ்க்கையில் புது மலர்ச்சியைக் காண்பீர்கள். செய்தொழிலை ஏற்றமுடன் நடத்துவீர்கள். கானல் நீர் என்று நினைத்திருந்த விஷயம் கைகூடப் பெறுவீர்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது; இதயத்திலும் விழுந்தது என்பதற்கொப்ப அனைத்து விஷயங்களும் மலர்ச்சியுடன் முடிவடையும்.குடும்பத்திலும் இரட்டிப்பு குதூகலம் நிறையும். உயர் பதவிகள் தேடி வரும். சமுதாயத்தில் முக்கிய பொறுப்புகள், பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பப் பொறுப்பும் கூடும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். பெற்றோருடனும் உடன்பிறந்தோருடனும் சுமுகமாக நடந்துகொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகளிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.21.11.2020 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் பணநடமாட்டம் அதிகரிக்கும். செல்வ நிலை உயரும். சுக சௌகர்யங்கள் கூடும். பருத்தி புடவையாய்க் காய்த்தது என்பார்களே அதுபோல வாழ்க்கையில் அனைத்து அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். தொலைதூரத்திலிருந்து நற்செய்திகள் வந்தடையும். செய்தொழிலை நேர்ப்பார்வையில் நடத்துவீர்கள். அனைத்து முயற்சிகளும் உடனடியாக வெற்றியைத் தரும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவுமிராது. சீமான் என்கிற நிலையில் வாழ்க்கைச் சக்கரம் சுழலும் காலமிது.

21.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து காரியமாற்றுவீர்கள். பழைய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள்போல் பழகும் துரோகிகளை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். நவீனமான வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். சிலருக்கு பேச்சின் மூலம் வருமானம் அமையவும் வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் படிக்க இடம் கிடைக்கும்.14.04.2022 முதல் 17.01.2023 வரை உள்ள காலகட்டத்தில் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். “தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்று எண்ணாமல் நம் நலம் நாடும் மூத்தோரின் அறிவுரைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். குடும்ப நிலை விருத்தியாகும். எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் ஒதுங்கி இருக்கவும். எவருக்கும் முன்ஜாமீன் போடுவது கூடாது.

உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உடன் பணியாற்றுபவர்களுடன் சுமுகமாக இருப்பது நல்லது. உங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக முடிவடையும். புதிய விற்பனை வாய்ப்புகளைத் தேடிச் செல்ல வேண்டாம். கூட்டாளிகளிடம் ரகசியங்களை மனந்திறந்து பேசவேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்கு உதவிகள் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கொள்முதலில் லாபம் உண்டு. அரசு மான்யம் கிடைக்கும். கால்நடைகளால் நல்ல லாபங்கள் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் தேடி வரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். எண்ணங்களை செயலாக்குவதில் தடைகள் இராது. சிறப்பான அங்கீகாரம் பெற்று அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள். உங்களுக்கு எதிராக தீட்டப்பட்ட சதிகள் உங்களை அணுகாது. கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

தொழிலில் நன்றாகச் செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சக கலைஞர்களின் உதவிகள் கிடைப்பது அரிது. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். கணவரை புரிந்து நடப்பீர்கள். உற்றார் உறவினர்களின் நன்மதிப்புக்கு பாத்திரமாவீர்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராக வருவீர்கள். சிறிய உடற்பயிற்சிகள் செய்து உற்சாகம் பெறுவீர்கள். எண்ணங்கள் ஈடேறும்.
பரிகாரம்: ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *