உங்களின் அழிவுக்கும், தோல்விக்கும் காரணம் உங்களுக்கு இருக்கும் இந்த குணம்தான்…! – Tamil VBC

உங்களின் அழிவுக்கும், தோல்விக்கும் காரணம் உங்களுக்கு இருக்கும் இந்த குணம்தான்…!

ஒவ்வொரு மனிதரும் குறைந்தது 100 வருடங்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் படைக்க படுகிறார்கள் என்று வேதங்கள் கூறுகிறது. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமது ஆயுள்காலத்தை நூறு ஆண்டுகளுக்கும் குறைவாக குறைத்துகொண்டே வருகிறது. இது நாம் உடலால் செய்யும் செயல்கள் மட்டுமின்றி மனதால் செய்யும் செயல்கள் கூட நம் ஆயுளை குறைக்கும் என்று பகவத் கீதை கூறுகிறது.

உங்களுக்குள் இருக்கும் இந்த குணங்கள் உங்களுக்கு தற்காலிக வெற்றியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கலாம். ஆனால் உண்மையில் அவை உங்கள் எதிர்காலத்தையும், உறவுகளையும் சிதைக்க கூடியவையாகும். இந்த பதிவில் உங்களுக்கு இருக்கும் எந்தெந்த குணங்கள் உங்களின் அழிவிற்கு காரணமாகிறது என்று பார்க்கலாம்.

ஆடம்பரத்தை விரும்புபவர்கள் பெரும்பாலும் போலியானவர்களாக இருப்பார்கள். எப்போதும் தாங்கள் வைத்திருப்பதை விட அதிகமாக இருப்பது போலவே மற்றவர்களிடம் பாசாங்கு செய்பவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களை சுற்றி எப்பொழுதும் ஒரு மாயபிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள், அது உடைந்து அவர்களின் உண்மை முகம் வெளிவரும் போது அவர்களின் அழிவு நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும்.

தற்பெருமை என்பது உங்களிடம் இருக்கும் பணம், அழகு, ஆரோக்கியம் மற்றும் திறமை என எதனால் வேண்டுமென்றாலும் ஏற்படலாம். இது மோசமான தீய குணமாகும். அனைத்திற்கும் மேலாக இந்த குணம் சிலருக்கு அவர்களின் பிறப்பு குறித்து கூட ஏற்படலாம். இந்த குணத்தால் இவர்கள் செய்யும் புறக்கணிப்பு பின்னாளில் இவர்களுக்கே தீமையாக வந்து முடியும். உண்மையில் சிறந்த மனிதர்கள் ஒருபோதும் தற்பெருமை பேச மாட்டார்கள்.

அகந்தை என்பது ஒருவரின் நிலை, சுய முக்கியத்துவம் மற்றும் செல்வாக்கு போன்றவற்றால் உங்கள் மனதில் ஏற்படுகிறது. அகந்தை எப்பொழுதும் ஆணவத்தை பின்தொடர்கிறது, உங்களுக்கு சக்தி இருந்தாலும் எப்போதும் அகந்தையிடம் இருந்து விலகி இருப்பதே உங்களின் மேன்மைக்கு வழிவகுக்கும். பல சக்திவாய்ந்த அரசர்களும் ஏன் மதத்தலைவர்கள் கூட வீழ்ந்ததற்கு காரணம் அவர்களிடம் குடிகொண்டிருந்த அகந்தைதான்.

பேராசையும், காமமும் தலைதூக்கி அது கைகூடாத போது விரக்தியில் வரும் கோபம் மிகவும் அபாயமானது ஆகும். கோபம் மனிதர்களின் ஒரு அடிப்படை குணமாக இருந்தாலும் அது எந்த நேரத்தில் வருகிறது, எதற்காக வருகிறது என்பதே அதன் விளைவை நிர்ணயிக்கிறது. நாகரீகமானவர்களும், அறிவிற் சிறந்தவர்களும் கூட கோபத்தில் தங்கள் நல்லறிவை இழந்த வரலாறு நிறைய உள்ளது. கோபத்தை உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பது அதைவிட ஆபத்தானதாகும். விழிப்புணர்வுடன் கோபத்தை கையாள வேண்டியது அவசியமாகும்.

கடுமையாக நடந்து கொள்வது எப்படியிருந்தாலும் ஆபத்தானதுதான். ஒருவர் சொல்லிலும், செயலிலும் எப்பொழுதும் மேன்மையை கடைபிடிக்க வேண்டும். கடுமையான அணுகுமுறை வன்முறைக்கு வழிவகுக்கலாம், அது உங்களை தவறான இடத்திற்க்கு அழைத்து செல்லும். வன்முறையை பயன்படுத்தி நீதியை பெற நினைப்பது கூட உங்களுக்கு அழிவைத்தான் உண்டாக்கும். புத்திசாலியான நபர்கள் எப்பொழுதும் மென்மையான போக்கையே கடைபிடிப்பார்கள்.

அனைத்து தீய குணங்களுக்கும் ஆணிவேராக இருப்பது அறியாமைதான். உங்களின் அறியாமை விலகினாலோ எது நல்லது, எது கெட்டது என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு கிடைத்துவிடும். உண்மையை அறிந்து கொள்ள இயலாதது, சரியான செயல்முறை எதுவென்று புரிந்து கொள்ள இயலாதது, எதனை நம்பவேண்டும், நம்பக்கூடாது என்று தெரியாமல் இருப்பது போன்ற அறியாமைகள் உங்களின் அழிவிற்கு வழிவகுக்கும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *