“எப்பவுமே டார்ச்சர்.. தம்பி பொண்டாடியையும் விட்டுவைக்கல.. அதான்”.. கணவனை கொன்ற நித்யா பகீர்..! – Tamil VBC

“எப்பவுமே டார்ச்சர்.. தம்பி பொண்டாடியையும் விட்டுவைக்கல.. அதான்”.. கணவனை கொன்ற நித்யா பகீர்..!

கள்ளக்காதலன், சொந்த தம்பியுடன் சேர்ந்து.. சரக்கில் விஷம் கலந்து கணவனை கொலை செய்துள்ளார் மனைவி.. 2 முறை மதுவில் விஷம் கலந்து கணவனுக்கு தந்துள்ளார்.. ஆனால் அவர் சாகவில்லை.. அதனால் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டார்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள பகுதி சின்ன மூக்கனூர்… இங்கு வசித்து வருபவர் ரமேஷ்குமார்… 34 வயதான இவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ந் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கடை பின்புறம் பிணமாக கிடந்தார்.. இவரது தலையில் ரத்த காயம் இருந்தது.

ஆனால் இவரை யார், எதற்காக கொன்றார்கள் என்று தெரியவில்லை. இதனால் அவரது மனைவி நித்யா ஜோலார்பேட்டை போலீசில் புகார் தந்தார்… ஆனால் போலீசாருக்கு நித்யா மீதுதான் முதல் சந்தேகமே விழுந்தது.. அதனால் அவரை லேசாக விசாரித்தனர்.. அதற்கே நித்யா கன்னாபின்னாவென்று உளற தொடங்கினார்.. அதனால் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் எல்லா விஷயத்தையும் கக்கினார்.

அவர் சொன்னதாவது: “என் கணவர் ரமேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.. ஊதாரி.. வீட்டு செலவுக்கு பணமும் தர மாட்டார்… என் தம்பி மனைவியிடம் சில்மிஷமும் செய்தார்… இந்த விஷயம் தெரிந்து என் தம்பி அரவிந்தன், நான், தம்பி மனைவி எல்லோருமே கோபத்திலும், ஆத்திரத்திலும் இருந்தோம். எனக்கு என் தம்பியின் நண்பர் மேஸ்திரி கணபதியுடன் கள்ள உறவு ஏற்பட்டது.

எங்களுக்கு ரமேஷ்குமார் தொல்லையாக இருப்பதால், நான், கணபதி, தம்பி அரவிந்தன் எல்லோரும் சேர்ந்து என் கணவனுக்கு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்தோம்… அவர் மயங்கி விழுந்தாரே தவிர உயிர் பிழைத்துவிட்டார்.. ஆனால் தொடர்ந்து என் தம்பி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து கொண்டே இருந்தார்.. அதனால்தான் திரும்பவும் கொலை செய்ய முடிவு செய்தோம்.

ஏற்கனவே செய்ததைபோலவே மதுவில் விஷத்தை கலந்து.. ஏரிக்கரைக்கு அழைத்து சென்று குடிக்க செய்தோம்.. அப்படி குடித்தும் இந்த முறையும் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதனால் பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கி அவர் தலையில் போட்டு கொன்றான் என் தம்பி..” என்றார். இதையடுத்து நித்யா, தம்பி அரவிந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஆனால், அந்த கள்ளக்காதலன் கணபதியை காணோம்.. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *