பொலிசாரால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் தீவிரவாதியின் இறுதி நொடிகள்: தற்செயலாக சிக்கிய வீடியோ! – Tamil VBC

பொலிசாரால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் தீவிரவாதியின் இறுதி நொடிகள்: தற்செயலாக சிக்கிய வீடியோ!

லண்டனில் தீவிரவாதி ஒருவர் சுடப்பட்டு கிடக்கும் இறுதி நொடிகள் பேருந்தில் பயணிக்கும் பயணி ஒருவரின் மொபைல் கமெராவில் சிக்கியுள்ளன.லண்டனில் மர்ம நபர் ஒருவர் திடீரென கடை ஒன்றிற்குள் நுழைந்து கத்தி ஒன்றை திருடிக்கொண்டு வெளியே வந்து அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை கத்தியால் தாக்கியுள்ளார். அதில் ஒரு ஆணும், 40 வயதுடைய ஒரு பெண்ணும் படுகாயமடைந்தனர்.

அப்போது ஜீன்ஸ் மற்றும் தலையை மூடும் வகையில் ஜெர்க்கின் அணிந்த சிலர் கத்தியால் தாக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்த சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் சுதேஷ் அம்மான்(20).ஏற்கனவே கடவுள் நம்பிக்கை இல்லாதோரை தலையை வெட்டியும், வன்புணர்வு செய்தும் கொல்லவேண்டும் என்ற தீவிரவாத எண்ணம் கொண்ட அம்மான், 13 தீவிரவாத குற்றங்களுக்காக சிறையிலிருந்துவிட்டு வெளியே வந்தவன்.

அவனை சுட்டவர்கள் சீருடையில் இல்லாத பொலிசார் என்பது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், பேருந்து ஒன்றில் பயணிக்கும் பயணி ஒருவரின் மொபைல் போனில் அம்மானின் இறுதி நொடிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

அம்மான் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்து கிடக்க, பொலிசாரில் ஒருவர் அவன் அருகே சென்று அவன் அப்பாவி மக்களை குத்த பயன்படுத்திய கத்தியை காலால் தட்டி விடுகிறார்.அப்போது அந்த தீவிரவாதி நெளிய, அவனது வயிற்றுப்பகுதியில் மனித வெடிகுண்டாக செயல்படும் தீவிரவாதிகள் உடலுடன் கட்டி வைத்திருக்கும் குண்டுகள் அடங்கிய பை ஒன்று இருப்பது தெரியவர, அதிர்ந்து பின்வாங்குகிறார்.

அத்துடன் மற்றவர்களை அங்கிருந்து விலகச் சொல்கிறார் அவர். பின்னர், அது போலியான வெடிகுண்டுகள் அடங்கிய பை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.பேருந்து நகர, சற்று தொலைவில் அந்த தீவிரவாதியால் குத்தப்பட்டவர்கள் கிடப்பதையும், மக்கள் அவர்களுக்கு முதல் உதவி செய்ய முயல்வதையும் காணமுடிகிறது.தற்செயலாக அந்த பேருந்து பயணி எடுத்த வீடியோவில், உயிருக்கு போராடும் தீவிரவாதியின் இறுதி கணங்களும், அவனால் குத்தப்பட்ட அப்பாவிகளின் நிலையையும் காண, அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *