குண்டு மழை பொழிந்த பீரங்கிகள்..! கொத்தாக கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள்: துருக்கி கொந்தளிப்பு.! – Tamil VBC

குண்டு மழை பொழிந்த பீரங்கிகள்..! கொத்தாக கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள்: துருக்கி கொந்தளிப்பு.!

சிரிய இராணுவப்படடை இட்லிப் நகரில் நடத்திய பீரங்கி தாக்குதலில் நான்கு துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் 9 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக துருக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், துருக்கிய படைகள் பதிலடி கொடுத்து சிரிய இராணுவத்தின் பகுதிகளை அழித்தன என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய வன்முறைகளை துருக்கி கூர்ந்து கண்காணித்து வருகிறது மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் அந்நாட்டு அரசாங்கம் நடத்தும் தாக்குதலைத் தடுக்க துருக்கி-ரஷ்யா ஒப்பந்தத்தின் பகுதியாக துருக்கி பிராந்தியத்தில் 12 கண்காணிப்பு படைகளைக் கொண்டுள்ளது.சோதனை சாவடியில் உள்ள தங்களது படை பலத்தை அதிகரிக்க துருக்கி படைகளை அனுப்பியதை அடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவால் ஆதரிக்கப்படும் சிரிய அரசாங்கம், சமீபத்திய வாரங்களில் இறுதிகட்டமாக இட்லிப் நகரத்தில் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.சிரியாவிற்கு எதிராக துருக்கி இராணுவ சக்தியை பயன்படுத்தும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடந்த வாரம் எச்சரித்திருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.எற்கனவே துருக்கியில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான சிரிய அகதிகள் உள்ள நிலையில், இட்லிபில் நடக்கும் தாக்குதலின் மூலம் அகதிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என துருக்கி அஞ்சுகிறது.இந்நிலையில், சிரியா பதிலடியில் தலையிட வேண்டாம்’ என்று துருக்கி ரஷ்யாவிடம் கோரியுள்ளது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *