கிரிக்கெட் வரலாற்றில் மிக அரிதான முறையில் அவுட்டான இந்திய வீரர்..! திகைக்க வைக்கும் வைரல் வீடியோ – Tamil VBC

கிரிக்கெட் வரலாற்றில் மிக அரிதான முறையில் அவுட்டான இந்திய வீரர்..! திகைக்க வைக்கும் வைரல் வீடியோ

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய ஏ அணித்தலைவர் ஹனுமா விஹாரி வினோதமாக அவுட்டானது வைரலாகியுள்ளது.நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேன் கிளீவர் வீசிய பந்தை துடுப்பாடிய விஹாரி ஸ்வீப் ஷாட் அடித்தார்.எதிர்பாராத விதமாக பந்து அருகில் களதடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரச்சின் ரவீந்திராவின் பேடைத் தாக்கி விக்கெட் கீப்பர் மெக்கான்சியை நோக்கிச் சென்றது, அவர் அதை கேட்ச் பிடித்து அசத்தினார்.

அவுட்டாகிவிட்டோம் என்பதை உணரவே விஹாரிக்கு சிறிது நேரமானது. 79 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்த விஹாரி நடையை கட்டினார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *