லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்… இணையதளத்தில் வைரல் ! – Tamil VBC

லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்… இணையதளத்தில் வைரல் !

சேலம் மாவட்டம் பெரிய கொல்லுப்பட்டி என்ற பகுதியில் கன்னங்குறிச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர் கணேசன் ஆகிய இருவரும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,அந்த வழியாக , ஒரு ஆட்டோ ஓட்டுநர் அதிவேகத்தில் ஆட்டோவை இயக்கி வந்துள்ளார். அவரைப் பிடித்து நிறுத்தியுள்ளனர். பின், அதிவேகமாக ஆட்டோ ஓட்டியதற்காக அவரிடம் காவலர்கள் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

அதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.200 பணத்தை காவலர் கணேசன் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *