பாத சனியால் இவ்வளவு நன்மைகள் உண்டாம்..! அவசியம் படியுங்கள்..! – Tamil VBC

பாத சனியால் இவ்வளவு நன்மைகள் உண்டாம்..! அவசியம் படியுங்கள்..!

கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் காலம் பாதச்சனி ஆகும். இதனால் குடும்ப சூழ்நிலையிலும் தன வருவாயிலும் சில சிக்கல்கள் நேரலாம்.இதற்கு சனிக்கிழமையில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி, சனிபகவானை வழிபட்டு எள் அன்னம், நைவேத்தியம் செய்து ஆராதித்து, அதனை ஏழைகளுக்கு வழங்கி, அப்படிப் பெறுகின்ற ஏழைகளுக்கு சில்லரைகளையும் தான தர்மங்களையும் செய்யலாம்.வீட்டிலும் தினசரி சமைத்த உணவை உண்ணுவதற்கு முன்பு காக்கைக்கு வைத்து அது உண்ட பின்பு உண்பது நலம். ஒரு தேங்காயை பசுவாக ஆவாகனித்து ஆத்ம சுத்தியுடன் ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் போதும். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவற்றை நடத்தினால் நல்லது.

பாதச் சனியால் உண்டாகும் பலன்கள் :கல்வியிலும், பதவிகளிலும் எந்தவித முன்னேற்றம் இன்றி மந்த நிலையாகவே இருக்கும். வீடு கட்டுபவர்களுக்கு சரியான வேலையாட்கள் அமையாமல் வீட்டு வேலை பாதியில் நிற்கும் நிலை ஏற்படலாம். கால்நடைகள் மற்றும் வாகனங்களால் லாபம் இல்லாமல் போகலாம். தேவையில்லாத செயல்களால் பொருள் இழப்பு ஏற்பட்டு பண நெருக்கடி போன்ற சூழல் அமையலாம்.வாக்கு ஸ்தானத்தில் சனிதேவர் இருப்பதால் தன் பேச்சாலேயே பிரச்சனைகளை தேடிக் கொள்வார்கள். பயன் இல்லாத பலஅலைச்சல்களை ஏற்படுத்துவார். பாதச் சனி நடைபெறும் காலங்களில் காலில் அடி, சுளுக்கு, புண், வாதம் போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *