பல் ஈறு அழற்சிக்கு வீட்டு வைத்திய குறிப்புகள்…!! – Tamil VBC

பல் ஈறு அழற்சிக்கு வீட்டு வைத்திய குறிப்புகள்…!!

பல் ஈறு அழற்சி என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு மிதமான ஈறு பிரச்சனையே. ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை சரியாக கவனிக்க தவறி விட்டால், நாளடைவில் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும்.
புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், பற்களை ஒழுக்காக துலக்காமல் போவது போன்ற காரணங்களால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். இந்த அழற்சியை குறைக்க சந்தையில் பல பொருட்கள் கிடைக்கிறது. ஆனாலும் கூட வீட்டு சிகிச்சை தான் இதற்கு சிறந்த தீர்வாகும்.

½ டீஸ்பூன் உப்பை தண்ணீரில் கலந்து, காலையிலும் மாலையிலும் உங்கள் வாயை கழுவவும். உப்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு குணங்கள், ஈறு வீக்கத்தை குறைக்கும்.தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்லாமல் ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் பின்பற்றி வந்தால் பல் தொடர்பான பிரச்சனை இருக்காது.ஈறு அழற்சிக்கான வீட்டு சிகிச்சைகளில் மிக பயனுள்ள டிப்ஸில் ஒன்றாக விளங்குகிறது மஞ்சள். மஞ்சளில் கர்குமின் என்ற பொருள் உள்ளது. இது ஈறு வலி, வீக்கம் மற்றும் எரிச்சலை சிறப்பான முறையில் குறைக்கும். மஞ்சளை வைட்டமின் ஈ எண்ணெயுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் ஈறுகளின் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை உங்கள் ஈறுகளின் மீது தடவி, 2 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்துங்கள். இதனால் பேக்கிங் சோடா வாயில் உள்ள அமிலத்தை செயலிழக்க செய்யும். மேலும் பல் பிரச்சனைகள் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும். ஈறு அழற்சிக்கான வீட்டு சிகிச்சை என்றால் அதில் கண்டிப்பாக எலுமிச்சையும் அடங்கியிருக்கும். இதில் வைட்டமின் சி இருப்பதால் தொற்றுகளில் இருந்து அது உங்களை பாதுகாக்கும். எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து, பல் துலக்கிய பின், அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகள் முன்பை காட்டிலும் குறையத் தொடங்கி விடும்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *