ரெடியாகிறதா ஃபேக் ஐடி லிஸ்ட்! ஆபாச பதிவர்களுக்கு அடுத்த செக்! – நீதிமன்றம் உத்தரவு! – Tamil VBC

ரெடியாகிறதா ஃபேக் ஐடி லிஸ்ட்! ஆபாச பதிவர்களுக்கு அடுத்த செக்! – நீதிமன்றம் உத்தரவு!

சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துகளை பதிவிடுபவர்களின் பட்டியலை தயார் செய்யுமாறு சைபர் க்ரைம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் நாளுக்கு நாள் பல்வேறு ஆரோக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், பல குற்றங்கள் நடைபெறவும் அது ஒரு வாய்ப்பாகி போய் விடுகிறது. சமீப காலமாக சமூக வலைதளங்கள் மூலமாக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிறார் பாலியல் வீடியோக்களை பதிவேற்றுபவர்கள் மற்றும் பார்ப்பவர்கள் மீது டிஜிபி ரவி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.இதை தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துகளை பதிவு செய்பவர்களின் பட்டியலை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தங்கள் பெயரிலோ அல்லது போலி பெயரிலோ கணக்கு தொடங்கி உலாவும் பலர் பெண்களின் பதிவுகளில் ஆபாசமாக பதிவிடுவதும், அவர்களது புகைப்படங்களை பதிவிறக்கி தவறான வழியில் உபயோகிப்பதும் தொடர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற புகார்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த அவதூறு, ஆபாச ஆசாமிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டவுடன் கைது நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *