இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: நிஷங்க பாலித்தவுக்கு நீதிமன்றம் பிணை! - Tamil VBC

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: நிஷங்க பாலித்தவுக்கு நீதிமன்றம் பிணை!

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை கையளித்த பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிக்க நீதிபதி ஆர்.குருசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சந்தேகநபர்களின் கைரேகையை பெற்று அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றிய காலப் பகுதியில் தனக்கு சாதகமாக செயற்பட நிஷங்க சேனாதிபதியால் 355 இலட்சம் ரூபா பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கமையஇ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *