ரசிகர்களுக்கு தன் அழகின் ரகசியத்தை open ஆக சொன்ன த்ரிஷா…. – Tamil VBC

ரசிகர்களுக்கு தன் அழகின் ரகசியத்தை open ஆக சொன்ன த்ரிஷா….

கடந்த 18 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா, தமிழில் ‛பரமபத விளையாட்டு, ராங்கி’ படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் 2006-ல் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் படத்தில் நடித்தவர் தற்போது மீண்டும் கொரட்டல்ல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில், அழகின் ரகசியம் குறித்து த்ரிஷா ஒரு பேட்டியில் கூறுகையில், அழகு என்பது இயற்கையாகவே இருந்தபோதும், சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம் சம்பந்தப்பட்டதும் கூட. அதோடு நான் அவ்வப்போது உண்ணாவிரதம் இருக்கிறேன். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குகிறேன். ஒரு வாரத்தில் 4-5 முறை உடற்பயிற்சி செய்கிறேன். அதோடு சரியான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். இதுவே எனது அழகின் ரகசியம் என தெரிவித்துள்ளார் த்ரிஷா.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *