உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரை எப்படி அழைத்து செல்கின்றனர்? வெளியான வீடியோ – Tamil VBC

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரை எப்படி அழைத்து செல்கின்றனர்? வெளியான வீடியோ

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை பிளாஸ்டிக் டியூப்பில் வைத்து கொண்டு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.சீனாவில் உயிர்க்கொல்லி நோயான கொரோனா என்ற மர்ம வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகளிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை சீனாவில் 17 பேர் பலியாகியிருப்பதாகவும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவி வருவதால், உலக மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, மனிதர்களுக்கு இது பரவுவதால், சீனாவில் மக்கள் அனைவரும் இப்போது முகத்தில் மாஸ்க் போட்டு பத்திரமாக வெளியில் சென்று வருகின்றனர்.இந்நிலையில் தற்போது சீனாவில் Guangdong மாகாணத்தின் Huizhou-வில் இருக்கும் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை பிளாஸ் டியூப்பில் வைத்து, மிகவும் பத்திரமாக கொண்டு செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த வைரஸ் தாக்குதல் சீனாவின் Hubei மாகாணத்திலே அதிகம் பரவியிருப்பதாகவும், இங்கிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் போது, அந்த நபர் குறித்த வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருந்தால், அது அந்த நாட்டில் இருக்கும் நபரை தாக்கும் என்பதால், அனைத்து நாட்டில் இருக்கும் விமானநிலையங்கள், இரயில்வே நிலையங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் சீனாவில் இருந்து வருபவர்கள் மருத்துவர்களால் பரிசோதிக்கப்படுகிறார்கள்.மேலும் சீனாவின் Wuhan அரசாங்கம், இந்த வைரஸ் தாக்குதல் உலகமெங்கிலும் பரவிவிடக்கூடாது என்பதற்காக அதை தடுக்கும் முயற்சியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் இருந்து விமானங்கள், நகர்ப்புற போக்குவரத்துகளை,மூடிவிடுவதாகவும், நகரத்திலிருந்து வெளியேறும் விமானங்களை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

https://mol.im/a/7915765#v-6239730087882999519

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *