சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான காரணங்களும் பாதிப்புகளும்…!! – Tamil VBC

சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான காரணங்களும் பாதிப்புகளும்…!!

சிறுநீரகம் தொடர்பான நோய்கள் நடுத்தர வயதினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்பிரச்சனையை வெளியே சொல்ல கூச்சப்படுவது, சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவை, இந்நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது.பொதுவாக, சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. தொடர் பிரசவம், மாதவிடாய் காலத்திற்கு பின், சிறுநீர் பாதையில் ஏற்படும் சுருக்கம் ஆகியவற்றால், பெண்களுக்கு இப்பிரச்னை உண்டாகிறது.

சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சீராக சிறுநீர் வெளியேறாதது, அடி வயிறு வலிப்பது, காய்ச்சல் போன்றவை, இதன் அறிகுறிகள். சிறுநீர் தொற்று பெரும்பாலும், பாக்டீரியா வகை தாக்கத்தால் தான் ஏற்படுகிறது.சிலருக்கு இருமல், தும்மல் உண்டாகும்போதும், தூக்கத்தின்போது, படுக்கையில் திரும்பி படுக்கும்போதும், குனிந்து, நிமிர்ந்து வீட்டு வேலைகளை செய்யும்போதும், சிறுநீர் வெளியேறும் இன்னல் அவர்களுக்கு உண்டாகிறது.பிறப்புறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது, தினமும் குறைந்தபட்சம், 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றால், சிறுநீரக தொற்று வராமல் தடுக்கலாம்.சிறுநீர் தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்ல தயங்காமல், சரியான நேரத்தில், சிறுநீரகவியல் நிபுணரை அணுகி, உரிய சிகிச்சை பெறுவதன் மூலம், இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *