இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொல்வின் குணரத்னவை நியமித்தமைக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கொல்வின் குணரத்ன சயிட்டம் நிறுவனத்திற்கு சார்பாக செயற்படும் ஒருவர் என, அச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒருவர் வைத்திய சபையின் தலைவராக நியமிக்கப்படுவது, சர்ச்சைக்குரிய விடயம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இந்த விடயம் குறித்து தமது சங்கத்தின் நிறைவேற்று சபை கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக, சமந்த ஆனந்த கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று பிற்பகல் இலங்கை வைத்திய சபையினர் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.