பிறக்கும்போது உள்ளங்கை அளவே இருந்த பிரித்தானிய குழந்தை: இன்று எப்படி இருக்கிறாள் பாருங்கள்! – Tamil VBC

பிறக்கும்போது உள்ளங்கை அளவே இருந்த பிரித்தானிய குழந்தை: இன்று எப்படி இருக்கிறாள் பாருங்கள்!

கடந்த 15 ஆண்டுகளில் இவ்வளவு குட்டியாக பிறந்த ஒரே குழந்தை இவள்தான் என்று கூறும் அளவுக்கு, அம்மாவின் உள்ளங்கை அளவே இருந்த ஒரு குழந்தை, இன்று அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாள்.

இசபெல்லாவுக்கு பல பிரச்சினைகள் இருந்ததோடு, அவர் கருவிலிருந்தால் தாய்க்கும் மகளுக்கும் உயிருக்கு ஆபத்து என்பதால் 24 வாரக் குழந்தையாக இருந்த, ஒரு பென்னி நாணயத்தை விட குட்டியாக இருந்த உள்ளங்கைகளை கொண்டிருந்த, வெறும் 12 அவுன்ஸ் எடையே இருந்த இசபெல்லாவை, அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் அவள் பிழைக்க ஐந்து சதவிகித வாய்ப்பே உள்ளது என்று கூறிவிட்டார்கள். குழந்தையை கட்டியணைப்பதற்கே 15 நாட்கள் பெற்றோர் காத்திருக்கவேண்டியதாக இருந்தது.பிறந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில், இசபெல்லாவின் குடலில் ஒரு பிரச்சினை இருந்ததால் அவளுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன.

அத்துடன், அவளது கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழலும் ஏற்பட்டது.ஆனால், பிழைப்பாளா என்று எல்லோரும் எண்ணிய இசபெல்லா, இப்போது 13 பவுண்டுகள் 7 அவுன்ஸ்கள் எடையுடன் நன்றாக இருக்கிறாள்.பல போராட்டங்கள், அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, குட்டிப் போராளி இசபெல்லாவை அவளது தந்தை ரயான் இவான்சும், தாய் கிம் பிரௌனும் Gloucestershireஇலுள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளார்கள்.

இப்போது இசபெல்லா தவழ்ந்து செல்கிறாள், எழுந்து நிற்க முயற்சிக்கிறாள், நன்றாக சாப்பிடுகிறாள் என்று கூறும் இசபெல்லாவின் தாய், அவளுக்கு சீஸ் மற்றும் அவகேடோ சாண்ட்விச் என்றால் மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார்.
அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள், யாரை சந்தித்தாலும் புன்னகை பூக்கிறாள், இவ்வளவு தூரம் அவள் வந்ததைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் பிரௌன்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *