175 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்திய 17 வயது வீரர் – அக்தர் சாதனை முறியடிப்பு ! – Tamil VBC

175 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்திய 17 வயது வீரர் – அக்தர் சாதனை முறியடிப்பு !

உலகின் மிகவேகமாக வீசப்பட்ட பந்து என்ற சாதனையை இலங்கையைச் சேர்ந்த 17 வயது மத்தீஷா பதிரானா பெற்றுள்ளார்.நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இலங்கையைச் சேர்ந்த மத்தீஷா பதிரானா என்ற 17 வயது பந்துவீச்சாளர் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார்.


ஜனவரி 19 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் அவர் வீசிய பந்து 175 கி.மீ வேகத்தில் வந்ததாக பதிவு செய்யப்ப்ட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் கைவசமிருந்த 17 ஆண்டுக்கால சாதனை ஒன்றைத் தகர்த்துள்ளார். 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது அக்தர் வீசிய ஒரு பந்து 163.1 கி.மீ எனப் பதிவானது. இதுவே இன்றளவும் உலகின் மிகவேகமான பந்தாக கருதப்பட்டு வருகிறது.ஆனால் இயந்திரக் கோளாறு காரணமாக இப்படி தவறாக பதிவாகியிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஐசிசி இதுவரை அதுபற்றி எதுவும அறிவிக்கவில்லை. அதனால் உண்மையான வேகமே பதிவானதாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *