குட்டி டோனி!… கிரிக்கெட்டில் அசத்தும் 4 வயது சிறுவன்! – Tamil VBC

குட்டி டோனி!… கிரிக்கெட்டில் அசத்தும் 4 வயது சிறுவன்!

கிரிக்கெட்டில் கலக்கும் 4 வயது சிறுவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் இந்திய அணி வீரரான மகேந்திரசிங் டோனி.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சனுஷ் சூர்யதேவ்(வயது 4), கிரிக்கெட்டில் அசத்தும் சிறுவனின் அசாத்திய திறமையை கண்டு வியக்காதவர்கள் எவருமில்லை.இவருடைய திறமையை Asian Book Of Records அங்கீகரித்துள்ள நிலையில், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இதனையறிந்த டோனி, சிறுவனை அழைத்து பாராட்டியதுடன், தான் கையெழுத்திட்ட பேட்டையும் பரிசாக கொடுத்தார்.இந்நிலையில் தற்போது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.சூர்யதேவை இந்திய அணியில் இடம்பெற செய்வதே தங்களது லட்சியம் என சூர்யதேவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *