மீதமான உணவை உண்பதற்கு வகுப்பறை வாயிலில் தினமும் நின்ற சிறுமிக்கு அடித்த அதிஷ்டம்..!! – Tamil VBC

மீதமான உணவை உண்பதற்கு வகுப்பறை வாயிலில் தினமும் நின்ற சிறுமிக்கு அடித்த அதிஷ்டம்..!!

பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் மிச்சத்தை உண்பதற்காகவே வகுப்பறையின் வாயிலில் தினமும் நின்ற சிறுமிக்கு அதிஷ்டம் அடித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;ஹைதராபாத் மாநகரில் குடிமல்கப்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் “தேவல் ஜாம் சிங்” என்ற அரசு பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஒரு வகுப்பறை வாயிலில், சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் கையில் தட்டை ஏந்திக்கொண்டு, ஆசிரியர் சொல்லித்தரும் பாடங்களை கவனிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சிறுமி தினமும் பள்ளிக்கு வருவார் என்றும், பள்ளி முடிந்தவுடன் இருக்கும் மிச்ச உணவுகளை உண்பார் என்றும் தெரியவந்தது. சிறுமியின் பெயர் திவ்யா என்பதும், அவர் அருகில் உள்ள சேரியில் வசித்து வருகிறார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவருடைய பெற்றோர் குப்பை சேகரிப்பாளர்கள் என்பதும் தெரியவந்தது.தற்போது அந்த சிறுமி அதே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *