ஜேர்மன் விமான தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அமெரிக்க வீரர்கள்! – Tamil VBC

ஜேர்மன் விமான தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அமெரிக்க வீரர்கள்!

ஜேர்மனியிலுள்ள அமெரிக்க விமான தளத்தில் இரண்டு அமெரிக்க விமானப்படை வீரர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.Spangdahlem விமானப்படை விமான தளத்தில் 10,000 முதல் 11,000 பேர், வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கியுள்ளனர்.அங்குள்ள தங்கும் அறை ஒன்றில் 20 வயதுள்ள Xavier Leaphart மற்றும் Aziess Whitehurst என்னும் இரண்டு வீரர்கள் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளனர் .

தகவல் அறிந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் உயிர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் எந்த பயனும் இல்லை.அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக 20 நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்தனர்.அவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதைக் கண்டறிவதற்காக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *