ஜல்லிக்கட்டில் சாதித்த இளம் சிங்கங்கள்… முதல் மூன்று பரிசுகளை தட்டி சென்ற 3 தங்கங்கள்..!! – Tamil VBC

ஜல்லிக்கட்டில் சாதித்த இளம் சிங்கங்கள்… முதல் மூன்று பரிசுகளை தட்டி சென்ற 3 தங்கங்கள்..!!

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கல் பண்டிகையின் போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது இயல்பான ஒன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டை தடை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு இன்று மக்களுக்காக, தமிழர்களுக்காக ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இதற்க்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வந்தது. இன்று காலை சுமார் 8 மணியளவில் ஜல்லிக்கட்டு துவங்கவுள்ள நிலையில், இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 730 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.ஜல்லிகட்டுப்போட்டி நடைபெறும் இடங்களில் அமரும் மாடம், அலங்கார வளைவு, ஒலிபெருக்கி, சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை சுமார் 8 மணியளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கிய நிலையில்., மாடுபிடி வீரர்கள் வீரமாக மாடுகளை தொடர்ந்து அடக்கி வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை சுமார் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியில் பங்கேற்ற வீரர்களில் 55 பேர் காயமடைந்துள்ள நிலையில், 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இறுதியாக 4.30 மணிக்கு நிறைவுபெற்றுள்ள நிலையில், சிறந்த மாடுபிடி வீரராக 14 காளைகளை அடக்கிய ஜெய்கிந்த்புரம் பகுதியை சார்ந்த விஜய்க்கு இரு சக்கர வாகனமும், 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பகுதியை சார்ந்த பரத்துக்கு பீரோ பரிசாகவும், 10 காளைகளை அடக்கிய முத்துப்பட்டி பகுதியை சார்ந்த திருநாவுக்கரசுக்கு பீரோ பரிசாக வழங்கப்பட்டது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *