வெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்! – Tamil VBC

வெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்!

வெயில் கடுமையை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி மீனாட்சி மிஷன் மருத்துவமனை உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஜெயந்திலால் கூறியதாவது: கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடல் குளிர்ச்சியாகும். தினமும் குறைந்தபட் சம் 3லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பாட்டில் குளிர்பானங்களில் ஆல்கஹால் கலந்து அருந்துவதை தவிர்க்க வேண்டும்.


இதன்மூலம் அதிகளவு சிறுநீர் வெளியேற்றப்பட்டு உடலில் உள்ள நீர்ச் சத்து குறைந்து விடும். பாட்டில் குளிர்பானங்களில் சுத்திகரிக்கப்பட்ட பாஸ்பரிக் அசிட் இருப்பதால் செரிமான முறையில் பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில் பாஸ்பரஸ் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீ ரகத்தில் கல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்துவதால், உடல் உண்மையான குளிர்ச்சியை அடையாது. இதன்மூலம் தோலில் உள்ள ரத்தநாளங்களில் பாதிப்பு ஏற்படுவதோடு வெப்ப இழப்பை ஏற்படுத்தும். எளிதான, சத்தான, கொழுப்பு குறைவான உணவுகளை உண்பது சிறந்தது. முள்ளங்கி, வால் மிளகு, வெங்காயம், பூண்டு, பீட்ரூட், பைனாபிள், திராட்சை மற்றும் மாம்பழம் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.

அதே போல் உலர்பழங்கள் சாப்பிடுவதையும் குறைத்து கொள்ள வேண்டும். தண்ணீரில் துளசி விதைகளை போட்டு, அந்நீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். பழம் மற்றும் காய்கறிகளை சாலட் செய்து சாப்பிடுவது நல்லது. சர்க்கரை கலக்காத உடனடி பழச்சாறுகள், எலுமிச்சைபழச்சாறு, இளநீர், மோர் சேர்ப்பது நல்லது.தர்பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிக சூடான, உப்பான,காரமான உணவுகளை சாப்பிட கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளான வடகம், சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரண்டு முறை குளித்தல், சுத்தமான காட்டன் ஆடைகள் அணிவதன் மூலம் வெயிலின் உக்கிரத்தை சமாளிக்கலாம்’ என்றார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *