பசியால் அழுத குழந்தை… பாலூட்டிய தாய்: குரங்கு செய்த நெகிழவைக்கும் செயல்! – Tamil VBC

பசியால் அழுத குழந்தை… பாலூட்டிய தாய்: குரங்கு செய்த நெகிழவைக்கும் செயல்!

வியன்னாவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றிற்கு சென்றிருந்த ஒரு பெண்ணின் குழந்தை பசியால் அழ, அவர் அதற்கு தாய்ப்பாலூட்ட, அதைக் கண்ட பெண் குரங்கு ஒன்று செய்த செயலைக் கண்டு அங்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.பிரித்தானிய பெண்ணான Gemma Copeland (30), தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வியன்னாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்குள்ள உராங்குட்டான் குரங்குகள் இருக்கும் பகுதிக்கு சென்றபோது, குழந்தை பசியால் அழுதிருக்கிறான்.ஒரு மூலையில், கண்ணாடியின் அருகே சென்று அமர்ந்து குழந்தைக்கு பாலூட்ட தொடங்கியிருக்கிறார் Gemma. அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கண்ணாடிக் கூண்டுக்குள் தொலைவிலிருந்து Gemmaவைக் கவனித்த ஒரு பெண் குரங்கு, ஒரு துணியை எடுத்து வந்து Gemmaஇருந்த இடத்திற்கு அருகே போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

Gemmaவின் முகத்தையும் குழந்தையின் முகத்தையும் மாறி மாறி பார்த்த அந்த குரங்கு, குழந்தையை தொடுவது போல் கண்ணாடியில் கை வைத்தும், கண்ணாடியில் முத்தமிட்டுக் கொண்டும் இருந்திருக்கிறது.பிறகு, தாய்ப்பாலூட்டும் ஜெம்மாவுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்துகொண்டிருக்கிறது அந்த குரங்கு.உயிரியல் பூங்காவிற்கு வந்தவர்கள், இந்த அரிய காட்சியைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து, தாய்ப்பாலூட்டும் பெண்ணுக்கும் மரியாதை கொடுக்கும் விதத்தில் சற்று தள்ளி அமர்ந்துகொண்டு, சுமார் அரை மணி நேரம் மெய்மறந்து இந்த நெகிழவைக்கும் காட்சியில் மூழ்கிப்போயிருக்கிறார்கள்.அந்த குரங்கின் செயல் தனக்கு கண்ணீர் வரவைத்ததாக தெரிவிக்கும் Gemma, குழந்தைக்கு பாலூட்டிய பிறகும் அங்கிருந்து நகர தனக்கு மனம் வரவில்லை என்கிறார்.பின்னர் விசாரித்ததில், அந்த குரங்கிற்கு சமீபத்தில்தான் ஒரு குட்டி இறந்தே பிறந்தது என்ற செய்தியும் தெரியவர, ஒரு தாயாக, கண்ணீர் வடித்தபடி அங்கிருந்து வர மனமேயில்லாமல் திரும்பியிருக்கிறார் Gemma.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *