முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி சாப்பிடும் பெண்! – Tamil VBC

முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி சாப்பிடும் பெண்!

இங்கிலாந்தில் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக விரும்பி சாப்பிட்டு வந்த பெண் பற்றிய செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இங்கிலாந்தில் வினோதம் – முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பிசாப்பிடும் பெண்முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பிசாப்பிடும் பெண் இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார்.

இதற்காக அவர் இதுவரை 8,000 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்து 56 ஆயிரம்) தொகையை செலவிட்டுள்ளார்.லிசா ஆண்டர்சனுக்கு 5-வது குழந்தை பிறந்த பிறகே, அவருக்கு பவுடரை சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை அவர் விரும்பி சாப்பிடுகிறார்.இந்த பழக்கம் துவங்கியதில் இருந்தது யாருக்கும் தெரியாமல் குளியலறைக்கு சென்று ரகசியமாகவே பவுடரை சாப்பிட்டு வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி சாப்பிடும் பெண் முன்னர்தான் லிசா குடும்பத்தினருக்கே இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. ஆனால் போதைக்கு அடிமையானது.போல், பவுடருக்கு அடிமையான அவரை, அதில் இருந்து மீட்க தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் அவரது குடும்பத்தினர்.மருத்துவர்களின் உதவியை நாடியபோது இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என்று கூறுகின்றனர்.

பவுடரை அளவுக்கு அதிகமாக சுவாசித்தாலோ, தின்றாலோ உடம்பிற்கு கெடுதல். புற்று நோய் கூட வர வாய்ப்புண்டு.ஆனால் லிசாவுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.இந்த பெண் இந்த பவுடரை உண்ணும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .வினோத நோய்கள் அறிகுறியாலும் இவ்வாறு சிலர் செயல்படுவதாக செய்திகள் இதுபோல முன்னர் வெளியாகி இருந்தன ,மனித சிந்தனைகள் ,அதன் உணர்வுகளை மாற்றம் பெறுவதால் இவ்வாறான வினோத விடயங்கள் இடம்பெறுவதாக உளவியல் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *