உங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா? இதோ எளிய பரிகாரம் – Tamil VBC

உங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா? இதோ எளிய பரிகாரம்

செல்வத்திற்கு அதிபதியாக லட்சுமி தேவி விளங்குகின்றார்.

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறுவார்கள்.

அந்தவகையில் வீட்டிற்குள் லட்சுமி தேவியை வரவழைக்கு எளிய பரிகார முறை ஒன்றினை தற்போது இங்கு பார்ப்போம்.

லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் பாதரச சிலையை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது.
பாதரசம் என்பது அனைத்து கடவுள்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் பாதரசத்தினால் செய்த சிலையை வைப்பதாலும் அவர் ஈர்க்கப்படுவார்.

லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகருகே வைத்து வழிபட்டால், லட்சுமி தேவி குளிர்விக்கப்படுவார்கள். அதுவும் வெள்ளியில் செய்யப்பட சிலைகள் என்றால், வீட்டில் உள்ள செல்வ செழிப்புகள் நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடும்.

லட்சுமி தேவியின் கால் தடங்கள் அல்லது வெள்ளியில் செய்யப்பட்ட கால் தடங்களை வீட்டில் வைத்தால் அது அவரை நம் வீட்டில் தங்க வைக்கும். அதிலும் கால் தடங்களை பணம் வைக்கும் திசையை நோக்கி வைக்கவும்.
லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

சங்கில் தண்ணீர் நிரப்பி, அதனை தெற்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவார்.
ஒற்றை கண் தேங்காயை தந்திரங்களுக்கு பயன்படுத்துவார்கள். இதனை வீட்டில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *