கையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் ? – Tamil VBC

கையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் ?

நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் கோயிலில் தரும் கயிறு கட்டுவது வழக்கம் ஆகும். இது தீய சக்தியை நீக்கும் என்ற நம்பிக்கை இந்து மக்களிடையே உள்ளது.

கையில் கயிறு கட்டுவதனால் நமக்கு பல வகை நன்மைகளை ஏற்படுத்துகின்றது.

நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும் என அறிவியல் ரீதியாக கூறப்படுகின்றது.

எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

பட்டு நூலினாலான காப்பு கயிறு
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு
நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம். இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.

ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு
இந்த கயிறினை மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும். இத்தகைய காப்பு கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறப்பு.

காசிக்கயிறு
இந்த வகை கயிறு முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவார்கள். இதுவும் ஒரு வகையில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காப்பதே ஆகும்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *