எந்த ராசிக்காரர்கள் பெஸ்ட் அப்பாவாக இருப்பார்கள் தெரியுமா? – Tamil VBC

எந்த ராசிக்காரர்கள் பெஸ்ட் அப்பாவாக இருப்பார்கள் தெரியுமா?

நீங்கள் ஒரு மிகச்சிறந்த அப்பாவா? ஒரு தந்தையாக இருப்பதை நீங்கள் எப்படி உணர்வீர்கள். உங்கள் குழந்தையின் மீது அதீத அன்பு கொண்டவராக நீங்கள். உங்கள் குழந்தைகளுடன் உங்கள் உறவு எப்படி இருக்கும். அவர்களுடன் விளையாடுவது, மகிழ்வது மற்றும் அன்பு செலுத்துவது போன்ற ஏகப்பட்ட சாகசங்களை மேற்கொள்ளும் ராசியா நீங்கள்.

அப்படின்னா நீங்க தான் பெஸ்ட் பாதர். கீழ்க்கண்ட இந்த ராசிக்காரர்கள் தான் பெஸ்ட் பாதர் என்று ஜோதிடம் கூறுகிறது. சரி வாங்க பார்க்கலாம்.

ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பொறுமைசாலியாக இருப்பார்கள். இவர்கள் கோபத்தை காட்டாமல் அமைதியாக பொறுமை காப்பவர். குழந்தைகள் செய்யும் அனைத்து குறும்பையும் இவர்களால் சமாளிக்க முடியும். மிகுந்த பொறுமைசாலி அப்பாக்கள். இவர்கள் மிகுந்த வலிமை உள்ளவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக அதிகம் உழைப்பவர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் மதிப்பை அறிவார்கள். குடும்பத்தின் மீது அதிக அன்பு மற்றும் பாசம் கொண்டவராக இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளை மதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தங்களிடமிருந்து நல்ல குணங்கள் தங்கள் குழந்தைகளுக்கு போக வேண்டும் என்று நினைப்பவர்கள். இதனால் இவர்கள் ஒரு நல்ல தந்தையாக இருக்கிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தலைமைப் பண்பு என்பது கூடவே பிறந்தது. இது இயற்கையாகவே அவர்களுக்கு உள்ள பண்பு. இவர்கள் தங்கள் குழந்தைக்கு பாதுகாப்பாகவும் பொறுப்பான தந்தையாகவும் இருப்பார்கள். குழந்தைகள் எதாவது கேட்டால் கூட ‘இல்லை’ என்ற மனப்பாங்கு இல்லாதவராக இவர்கள் இருப்பார்கள். ஒழுக்கநெறிகளுடன் குழந்தைகளை வளர்க்க முற்படுவார்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்களை சுற்றி அமைதியையும் சந்தோஷத்தையும் மலரச் செய்பவர்கள். யாராவது சந்தோஷமாக இல்லாமல் இருந்தால் கூட இவர்களுக்கு பிடிக்காது. அவர்களின் பிரச்சனைகளையும் சமாளிக்க கூடியவர்கள். எனவே இவர்கள் தங்கள் குழந்தைகளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வார்கள். அதே மாதிரி இவர்கள் உணர்ச்சிமிக்கவராக இருப்பார்கள். இவர்கள் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றக் கூடியவர்கள்.

மகரம்
இவர்கள் தொழில் சார்ந்த மனநிலை உடையவராக இருப்பார்கள். இதனாலேயே இவர்கள் வேலைக்கு சென்று தங்கள் குடும்பத்தை உயர்வாக வைத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றுவார்கள். இவர்கள் தங்கள் குடும்பத்திற்காக வேலை பார்ப்பவராக இருப்பார்கள். அவர்களது பணி நெறிமுறைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் குழந்தைகளின் அளவிற்கு இறங்கி சென்று அவர்களுக்கு எதையும் கற்றுத் தருபவர்கள். தங்கள் குழந்தைகளுக்காக அன்பை மனதில் கொண்டு சுமப்பவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுடான உறவில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். இவர்கள் தான் குழந்தைக்கு பிடித்தமான அப்பாக்களாக இருப்பார்கள்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *