சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட இருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்காக அக்மீமன தேரர் உள்ளிட்ட இருவர் இன்று (திங்கட்கிழமை) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், விசாரணையின் பின்னர் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரோஹிங்கிய அகதிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், ஏற்கனவே ஐவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.