வெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை – உதவி செய்த ஜில்லா’ புகழ் மோகன்லால்…. – Tamil VBC

வெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை – உதவி செய்த ஜில்லா’ புகழ் மோகன்லால்….

வெளிநாட்டில் வசிக்கும் தந்தை, மகளின் திருமணத்திற்காக கேரளா வந்த நிலையில், அவர் வெள்ளத்தில் சிக்கி இறந்ததால், அவரின் குழந்தைகளுக்கான பள்ளி செலவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

கேரளாவில் கடந்த வாரம் பெய்த கனமழையால், ஆங்காங்கே நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் துபாயில் குடும்பத்துடன் தங்கி வசித்து வரும் ரசாக்(42) என்பவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரின் சொந்த ஊர் திருனவாயா என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இவர் இந்த மாதத்தின் துவக்கத்தில் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் கேரளா வந்துள்ளார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய தன் இரண்டு மகன்களின் உயிரைக் காப்பாற்றி, கடைசியில் அவர் உயிரிழந்தார். இதில் அவரின் மருமகனும் வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் கேரளா சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் மோகன்லாலுக்கு தெரியவர, அவர் அந்த குடும்பத்தினரை உடனே தொடர்பு கொண்டு, தன்னுடைய தொண்டு நிறுவனம் மூலம் உதவ முன்வந்துள்ளார்.

அதன் படி ரசாக்கின் குடும்பத்தினர் தங்கியிருந்த வீடு, வெள்ளத்தால் தரைமட்டமானதால், அவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் ரசாக்கின் மைத்துனர் வீட்டில் தங்கியுள்ளனர். இதனால் அங்கு வந்த மோகன்லால் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அவர் குடும்பத்தினரைச் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளனர். மோகன்லால் தற்போது படத்திற்கான ஷுட்டிங்கில் இருப்பதால், அவர் ரசாக்கின் இரண்டு குழந்தைகளிடமும் போனில் தொடர்பு கொண்டு, உங்களுக்கு நான் இருக்கிறேன், என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *