‘எம்மதமும் சம்மதம்’ – சர்ச்சைக்கு நடிகர் மாதவன் பதில் : மதம் மாறியதாக எழுந்த சர்ச்சை….! – Tamil VBC

‘எம்மதமும் சம்மதம்’ – சர்ச்சைக்கு நடிகர் மாதவன் பதில் : மதம் மாறியதாக எழுந்த சர்ச்சை….!

நடிகர் மாதவன் வெளியிட்ட புகைப்படத்தில் இயேசு சிலுவை இருந்ததால், அவர் மதம் மாறியதாக சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து தற்போது அதற்கு பதிலளித்துள்ளார்.

நேற்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நடிகர் மாதவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும், அவரது தந்தை, மகன் என மூவரும் வீட்டில் பூஜையில் இருப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் பின்னால் இயேசு சிலுவை ஒன்று இருந்தது. இதனால் நடிகர் மாதவன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார் எனவும், ஹிந்துவாக இருந்துகொண்டு ஏன் அவர் தன் வீட்டில் இயேசு சிலுவையை வைத்துகொண்டிருக்கிறார் எனவும் சர்ச்சைகள் எழுந்தது.


இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் தக்க பதில் அளித்துள்ளார்,
அதே புகைப்படத்தில் சீக்கிய மத அம்ரிஸ்டர் கோயிலின் புகைப்படமும் இருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் எல்லா மதங்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் மதிப்பதாகவும் தனக்கு எம்மதமும் சம்மதம் என்றும் தெரிவித்தார்.

ஹிந்து மத கோயில்களுக்கு மட்டும் இன்றி தான் தர்கா, சர்ச்சுகள், குருத்வாரா ஆகிய புனிதத்தலங்களுக்கும் சென்றுள்ளதாகவும், அப்போது அவருக்கு எந்த வித பாகுபாடும் இன்றி உரிய மரியாதையும் அன்பும் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த பதிவை ஒட்டி பலரும் நடிகர் மாதவனை பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சிலர் அவரது இந்த மதக்கொள்கையை விமர்சித்து வருகின்றனர். இந்த மத விமர்சனங்களை தாண்டி புகைப்படத்தின் இடதுபக்கத்தில் மது பாட்டில்களை அவர் வைத்திருப்பதையும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *