சுதந்திர தினத்தில் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. ‘இந்தியன்-2’ புதிய போஸ்டர்….. – Tamil VBC

சுதந்திர தினத்தில் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. ‘இந்தியன்-2’ புதிய போஸ்டர்…..

சுதந்திர தினத்தை முன்னிட்டு கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் ஷங்கர் இன்று வெளியிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் சீக்வல் ‘இந்தியன்-2′ அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

பிறகு இப்படம் திட்டமிட்டப்படி தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு வேலைகளை மீண்டும் தொடங்கினார் ஷங்கர்.

இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தியன் தாத்தா’ சேனாபதி கதாபாத்திரத்தில் கமல் கம்பீரமாக இருக்கும் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

‘இந்தியன்-2’ படத்திற்கு முதலில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இப்படத்தின் தாமதத்தால் அவர் இப்படத்தில் இருந்து விலக, அவருக்கு பதில் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு பணியாற்றுகிறார். இவர் இதற்கு முன்பு ஷங்கருடன் ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றியுள்ளார். அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தை பற்றிய பிற அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *