தொண்டை குழியில் சிக்கிய பல் செட்.. அதிர்ந்த மருத்துவர்கள்…அப்படி என்ன நடந்தது? – Tamil VBC

தொண்டை குழியில் சிக்கிய பல் செட்.. அதிர்ந்த மருத்துவர்கள்…அப்படி என்ன நடந்தது?

இங்கிலாந்தில் முதியவர் ஒருவரின் தொண்டை குழியில் பல் செட் சிக்கியுள்ளது. இதனை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

லண்டன்: இங்கிலாந்தில் எர்மவுத் நகரில் தனியார் பல்கலைக்கழக மருத்துவமனையில் 72 வயதுடைய முதியவர் ஒருவர், தொண்டையில் வலி இருப்பதாகவும், இருமினால் ரத்தம் வருவதாகவும் கூறி சேர்ந்துள்ளார்.
மேலும் மூச்சு சீராக விட முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார். அவரை உடல் முழுவதும் செக் செய்த மருத்துவர்கள், எவ்வித கோளாறும் இல்லை என கூறியுள்ளனர். மருத்துவர்களுக்கும் என்ன பிரச்சனை? ஏன் இப்படி ஆகிறது? என புரியாமல் இருந்துள்ளனர். இறுதியாக மருத்துவர்கள் , எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்போம். எலும்புகளில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? என்பதை அறிந்தால் இதற்கான காரணம் தெரிய வரும் என எடுத்துப் பார்த்துள்ளனர். எக்ஸ்ரேவை பார்த்ததும் மருத்துவர்கள் அதிர்ந்தனர்.

அந்த எக்ஸ்ரேவில் தொண்டை குழியில் பெரிய பல் செட் எலும்புகளுக்கு நடுவே மாட்டி இருந்துள்ளது. இது குறித்து முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் கூறுகையில், ‘ஒரு வாரத்துக்கு முன்பாக எனக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது மருத்துவர்கள் தவறுதலாக இப்படி செய்து விட்டனர் என நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.

அந்த முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து வருகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *