பல ஆண்டுகால ரகசியத்தை போட்டு உடைத்த மொட்டை ராஜேந்திரன்…. – Tamil VBC

பல ஆண்டுகால ரகசியத்தை போட்டு உடைத்த மொட்டை ராஜேந்திரன்….

வில்லன் நடிப்பா, ஸ்டண்டா, காமெடியா அனைத்திலும் அசத்துபவர் மொட்டை ராஜேந்திரன். பலருக்கும் சந்தேகம் வரும்.
ஏன் மொட்டை ராஜேந்திரன் என்று அழைக்கின்றனர் என்று, அவர் தலை ஏன் மொட்டையாக இருக்கிறது. தலை மொட்டை ஆனதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார்.


வில்லன் நடிப்பா, ஸ்டண்டா, காமெடியா அனைத்திலும் அசத்துபவர் மொட்டை ராஜேந்திரன். பலருக்கும் சந்தேகம் வரும். ஏன் மொட்டை ராஜேந்திரன் என்று அழைக்கின்றனர் என்று. அவர் தலை ஏன் மொட்டையாக இருக்கிறது. தலை மொட்டை ஆனதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிப் படங்களிலும் ஸ்டண்ட் மேனாக சினிமாவில் வாழ்க்கையை துவங்கினார் ராஜேந்திரன். பின்னர் இவரது திறமையை தெரிந்து கொண்ட இயக்குனர் பாலா “நான் கடவுள்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்தார்.

படம் சரியாக போகவில்லை என்றாலும் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டியிருப்பார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போனார்கள்.

அதன் பிறகு தொடர்ச்சியாக வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று நடித்து வந்தார். நான் கடவுள் ராஜேந்திரன் பார்ப்பதற்கு வில்லன் தோற்றத்தில் இருந்தாலும். பழகியவர்களிடம் குழந்தை போல் நடந்து கொள்வார். வெகுளியான மனிதர். எல்லோரிடமும் அன்பாக பேசக்கூடியவர். இதை தெரிந்து கொண்ட தமிழ் இயக்குனர்கள் ராஜேந்திரனை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வெற்றியும் கண்டனர். இவர் 10 வருடங்களுக்கும் மேல் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆனால், ஆரம்பகாலத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிகம் கர்லிங் முடி இருந்ததாம். ஸ்டண்ட் மேன் என்பதால் எந்த ஒரு ஆபத்தான ஸ்டண்டையும் துணிச்சலாகவும் தைரியமாகவும் செய்வாராம். அப்போது வயநாடு கல்பட்டாவில் மலையாள படம் ஒன்றின் சண்டை காட்சிக்காக அவர் 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதித்தாராம்.

ராஜேந்திரனின் சாகசத்தை பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள், அவர் தண்ணீரில் குதித்து வெளியில் வந்த பின்னர் ராஜேந்திரனிடம் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதாவது, “நீங்கள் குதித்தது ரசாயன ஆலை கழிவு நீரில்”. அதை பெரிதும் பொருட்படுத்தாத ராஜேந்திரனுக்கு சில நாள் கழித்து தலையில் சிறிய அளவில் பொடுகு வந்துள்ளது. அது பெரிதாகி தலையில் உள்ள முடி அனைத்தும் விழுந்துவிட்டதாம். இப்படி தான் அவர் தலை மொட்டையானதாம். மொட்டைக்கான ரகசியத்தை ஒரு பேட்டியின் போது மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *